நானும் ‘தல’ ரசிகைதான்…. வழிக்கு வந்த வரலட்சுமி!

By Mayura Akilan

விஷால் படம் பற்றி உயர்வாக டுவிட்டரில் பதிவிட்ட வரலட்சுமியை அஜீத் ரசிகர்கள் தாறுமாறாக திட்டியதால் அவர் வேறு வழியின்றி அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம், கார்த்தியின் அழகுராஜா, விஷாலின் பாண்டியநாடு ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த படங்கள் பற்றி கருத்து சொன்ன வரலட்சுமி, விஷாலின் பாண்டியநாடுதான் வின்னர் என்று கூறியிருந்தார். இதுதான் அஜீத் ரசிகர்களை கடுப்பாக்கிவிட்டது என்கின்றனர்.

சரத்குமார் மகள்

சரத்குமார் மகள்

பிரபல நடிகரும், எம்.எல்.ஏவுமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமானார்.

விஷால் நட்பில்

விஷால் நட்பில்

வரலட்சுமிக்கும், விஷாலுக்கும் பிரிக்க முடியாத நட்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். விஷாலுடன் ‘மதகஜராஜா' படத்திலும் நடித்துள்ளார். ‘மதகஜராஜா' படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு

விஷாலின் ‘பாண்டிய நாடு' படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

வின்னர் விஷால்

வின்னர் விஷால்

விஷால், அஜீத், கார்த்தி ஆகியோரின் மூன்று படங்களையும் போட்டு, ‘இந்த தீபாவளிக்கு வின்னர் விஷால்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தல ரசிகர்கள்

தல ரசிகர்கள்

இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் கடுப்பாகி வரலட்சுமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை தாறுமாறாக திட்டி கருத்து வெளியிட்டிருந்தனர்.

வரலட்சுமி மன்னிப்பு

வரலட்சுமி மன்னிப்பு

இதைக் கண்ட வரலட்சுமி, எதற்கு வம்பு என்று தான் வெளியிட்டிருந்த கருத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தல ரசிகைதான்...

தல ரசிகைதான்...

"நானும் ‘தல' ரசிகைதான். ‘தல‘ ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்" இந்த போட்டோவை யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். அதை நானும் அப்படியே போட்டுவிட்டேன்.. என்று குறிப்பிட்டிருந்தார். இதன்பிறகே அஜீத் ரசிகர்கள் அமைதியாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X