இதுதான் ஹிப்.. அது அப்.. வரலட்சுமி சரத்குமார் போட்ட டான்ஸ்.. எப்படிப்பட்ட வரிகள் தெரியுமா?
சென்னை: போடா போடி படத்தின் மூலம் தமிழ் அறிமுகம் ஆனவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது காமெடி நடிகை கோவை சரளா பாட்டிற்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். அவர் நடித்த முதல் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதைத்தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை திரைப்படம் வரலட்சுமி சரத்குமாருக்கு பெயரும் புகழையும் பெற்றுத் தந்தது. இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். பாலா பட நடிகைகளுக்கென்று தனித்துவம் இருக்கிறது. அதற்கான அந்தஸ்தையும் அவர் பெற்றார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் சண்டக்கோழி 2 படத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டினார்.

கன்னடம், தெலுங்கு படங்களில் குணச்சித்திரம், வில்லன் என கதைகளுக்கேற்ற கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் வரலட்சுமி. திரையில் நடித்துக்கொண்டிருந்தபோதே நடிகர் விஷாலுடன் லிவிங் உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சினிமா நடிகர்கள் சங்க தேர்தலில் வரலட்சுமி சரத்குமாரை எதிர்த்து விஷால் டீமை ஆதரித்ததும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இந்த தேர்தலின் வெற்றிக்கு பிறகு விஷால் வரலட்சுமியை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. விஷாலும், வரலட்சுமியும் இணைந்து ஒன்றாக நடித்த படம் மதகஜராஜா. அப்படம் 13 ஆண்டுக்கு பிறகு கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றியும் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: காதல் முறிவுக்கு பிறகு தனிமையில் இருந்த வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமணமும் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ் பெண் வடநாட்டவரை திருமணம் செய்துகொள்வதா என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு வரலட்சுமி சரத்குமார் தக்க பதிலடியும் கொடுத்தார்.

கணவர் மீது பொறாமை: திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய வரலட்சுமி, என் கணவர் என்னை விட தென்னிந்திய பையனாக மாறிட்டாரு. தமிழ் பண்டிகையை தெரிந்துகொண்டு என்னை விட அவர் ரொம்ப டிரடிஷனலாக ஆடை உடுத்தும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு சச்தேவும், என் அப்பாவும் பக்காவா பிளான் பண்ணி எல்லா வேலையையும் முடிச்சிடுவாங்க. இதை பார்க்க ரொம்ப ஹேப்பியாக இருக்கிறது. ஆனால், இதில் என்ன கொடுமை என்னன்னா என் குடும்பத்தில் இருப்பவர்கள் என் கணவரிடம் தான் அதிகம் பேசுகின்றனர். என்னை கண்டுகொள்ளவில்லை. இதை பார்த்தால் என்ன நடக்குது இங்க இது என் குடும்பம் தானா என ஜாலியாக வரலட்சுமி தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் என்ட்ரி: திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட வரலட்சுமி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக முதல் முறையாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தனது குழந்தை பருவத்தில் நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளை பேசி கண்ணீர் விட்டார். குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்னை போன்ற பாதிப்பு பலருக்கும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. பலரும் ஆதரவு ெதரிவித்தனர்.
டான்ஸ் போட்ட வரலட்சுமி: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அவர் நன்றாக நடனம் ஆடுவார் என்பதை சொல்லவா வேண்டும். தாரை தப்பட்டை படத்தில் போட்ட நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், கோவை சரளா ஹிப் இது அப் என்று நடனம் ஆடும் காட்சிக்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து வரலட்சுமி வெளியிட்டுள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











