twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்விட்டரில் கெஞ்சிய வரலட்சுமி: எதற்கு தெரியுமா?

    By Siva
    |

    சென்னை: நாங்க இருக்கோம் என்று நெட்டிசன்கள் வரலட்சுமி சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி ஒருவர் கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியை சீரழித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் சிறுமிக்கு நீதி கேட்டு பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    தண்டனை

    நாம் ஒன்று சேர்ந்து நீதி கேட்போம். பலாத்காரம் செய்தால் மரண தண்டனை என்று சட்டம் வர வேண்டும். கேட்டால் தான் கிடைக்கும். சரியான காரணங்களுக்காக குரல் கொடுக்குமாறு சக இந்தியர்களை கெஞ்சிக் கேட்கின்றேன். பலாத்காரம் என்பது சகித்துக் கொள்ளக் கூடியது இல்லை என்று வரலட்சுமி ட்வீட்டியுள்ளார்.

    சிறுமி

    அந்த சிறுமி சீரழித்து கொல்லப்பட்டது நம் வீட்டு பிரச்சனை இல்லை என்று இருந்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் வரலட்சுமி. இது போன்ற கொடுமை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார் அவர்.

    பாதுகாப்பு

    நான் வரலட்சுமி சரத்குமார். நான் ஒரு பெண். நான் பாதுகாப்பாக உணரவில்லை. தவறு செய்தவர்கள் தண்டை அனுபவிக்க வேண்டிய நேரம். மேலும் ஒரு குழந்தை அல்லது பெண்ணின் உயிர் போகக் கூடாது..மரண தண்டனை தான் ஒரே வழி...இதை மீடியாக்கள் டிரெண்டாக்க வேண்டும்...பொறுப்புடன் இருங்கள்...ஜெய் ஹிந்த் என்று ட்வீட்டியுள்ளார் வரு.

    நெட்டிசன்ஸ்

    வரலட்சுமி ட்வீட்டை பார்த்து நெட்டிசன்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    English summary
    Acress Varalaxmi tweeted that, 'I am Varalaxmi Sarathkumar.. i am a woman.. im standing up today.. I don’t feel safe anymore and it’s time the perpetrators pay for their mistakes.. Not one more loss of a child or woman.. #deathpenalty is the only way.. media make this trend.. be responsible.. Jai hind..!'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X