வரலட்சுமி கணவருக்கு பிறந்தநாள்.. எப்படி வாழ்த்து சொல்லிருக்காங்க பாருங்க.. செம காதல்
சென்னை: சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து அவர் நடித்துவந்தாலும் பெரிய திருப்புமுனை எதுவும் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த வருடத்தில் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்துவரும் அவர்; தனது கணவருக்கு சொல்லியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்து ட்ரெண்டாகியுள்ளது.
சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்தார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. பிறகு தங்களுக்குள் ஒத்து வராததால் அவர்கள் பிரிந்தார்கள். இந்தப் பிரிவுக்கு பிறகு சாயா சிங்கிளாகத்தான் இருக்கிறார். அதேசமயம் நடிகர் சரத்குமாரோ நடிகை ராதிகா சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராதிகாவை திருமணம் செய்தாலும் வரலட்சுமி, சாயா மீது அவருக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு.
வரலட்சுமியின் கரியர்: தனது தந்தை வழியில் தானும் சினிமாவில் ஜொலிக்க ஆசைப்பட்டார் வரலட்சுமி. ஆனால் அதற்கு சரத் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு ராதிகாவும், சாயாவும் சேர்ந்து அவரது மனதை மற்ற; வரலட்சுமியின் சினிமா என்ட்ரிக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தது. அதன்படி விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி படத்தில் ஹீரோயினாக இன்ட்ரோ ஆனார் வரு. போட்டிக்கு துப்பாக்கி களமிறங்கியதால் போடா போடி தோல்வியை சந்தித்தது.

நல்ல நடிகை: படம் தோல்வியை சந்தித்தாலும் வரலட்சுமியின் நடிப்புக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அப்படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். தனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் எதிர்பார்த்திருந்த வருவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அதேசமயம் இப்படத்திலும் அவரது நடிப்புக்கு சூப்பர் பெயர் கிடைத்தது. தொடர்ந்து சினிமாக்களில் நடித்துவந்தாலும் அவரது திறமைக்கு ஏற்ற வெற்றி இன்னமும் கிடைக்கவில்லை என்பது கசப்பான எதார்த்தம்.
வருவுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றார். ஆனாலும் இந்தக் காதலின் திடத்தன்மையை புரிந்துகொண்ட சரத்குமார் சம்மதம் தெரிவிக்க; கடந்த வருடத்தில் தாய்லாந்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. சென்னையில் நடந்த வரவேற்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
வரலட்சுமியின் வாழ்த்து: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் வரலட்சுமி. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் வரு. அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "என்னை சிரிக்க வைப்பவர்; நான் அழும்போது அணைத்துக்கொள்பவர். என்னை ராணி போல் நடத்துபவர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் நின்று என்னை காப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை சொல்ல வார்த்தைகள் போதாது. நீ என் அரசன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











