கொடைக்கானலில் குத்தாட்டம் போட்ட வரலக்‌ஷ்மி சரத்குமார்.. அதிலும், அந்த கண்ணாடி மேஜிக் வேறலெவல்!

சென்னை: கைவசம் 10 படங்களை வைத்துக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என படு பிசியாக இருக்கிறார் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார்.

அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் எல்லாம் விரைவில் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன.

இந்நிலையில், கொடைக்கானலில் புதிய படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றுள்ள அவர், அங்கே குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

10 படங்கள்

10 படங்கள்

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் புதிதாக படங்கள் ஏதும் வரவில்லையே என ஏங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு கைவசம் பத்து படங்களை வைத்துக் கொண்டு வரலக்‌ஷ்மி சரத்குமார் வெறித்தனமாக நடித்து வரும் செய்தி உற்சாகத்தை அளித்துள்ளது. தென்னிந்திய மொழி படங்களில் செம பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

8 தமிழ் படங்கள்

8 தமிழ் படங்கள்

இதில், 7 படங்கள் தமிழ் மொழியில் வெளியாக காத்திருக்கின்றன. போடா போடி படம் மூலம் அறிமுகமான வரலக்‌ஷ்மி சரத்குமார், சர்கார் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இரவின் நிழல், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, யசோதா மற்றும் சபரி உள்ளிட்ட 8 படங்கள் இவரது நடிப்பில் விரைவில் தமிழில் வெளியாக காத்திருக்கின்றன.

இரவின் நிழல்

இரவின் நிழல்

உலக சாதனை படமாக பார்த்திபன் உருவாக்கி உள்ள இரவின் நிழல் படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலர் காட்சிகளிலும் வரலக்‌ஷ்மி சரத்குமார் மிரட்டி இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இரவின் நிழல் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் குத்தாட்டம்

கொடைக்கானலில் குத்தாட்டம்

பாலகிருஷ்ணாவின் NBK 107வது படத்திலும் நடித்து வருகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். இந்நிலையில், தனது படத்தின் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானில் முகாமிட்டுள்ள வரலக்‌ஷ்மி சரத்குமார், திறந்தவெளியில் மேகங்கள் புடைசூழ கொடைக்கானலில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கண்ணாடி மேஜிக்

ஆரம்பத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நேரடியாக ஆடுவது போல தெரியும் இந்த வீடியோவில், ஒரு பெரிய கண்ணாடிக்கு முன்பாக அவர் ஆடும் காட்சிகள் போக போக வீடியோவில் ரிவீல் ஆக ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் இப்படி டான்ஸ் ஆடும் வீடியோவை ஷேர் செய்து டிரெண்ட் செய்துள்ளார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

சமீபத்தில் மற்ற நடிகைகளை போலவே இவரும் மாலத்தீவுக்கு சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தார். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில், விரைவில் மீண்டும் கோலிவுட் பக்கம் ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67ல்

தளபதி 67ல்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரைவில் தான் இயக்கப் போகும் ஒரு படத்தில் வலிமையான பெண் கதாபாத்திரம் இடம்பெறும் எனக் கூறியுள்ளார். அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ள லோகேஷ், சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்து மிரட்டிய வரலக்‌ஷ்மி சரத்குமாரை நடிக்க வைத்தால் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதற்கான வாய்ப்பு அமையுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X