ப்பா.. என்னம்மா வில்லா வளையுறாரு வரலக்ஷ்மி சரத்குமார்.. செம ஸ்லிம்மா மாறிட்டாரே.. செம வீடியோ!
சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் லேட்டஸ்ட் வொர்க்கவுட் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சிம்புவின் போடா போடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
விரைவில் வெளியாக உள்ள நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார் வில்லாக வளைந்து செய்த வொர்க்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீப காலமாக தெலுங்கில் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் ஆகி வருகிறது. ஹீரோயினை தாண்டி கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.

இரவின் நிழல்
உலகளவில் பல விருதுகளை குவித்து வரும் இரவின் நிழல் வரும் ஜூலை 15ம் தேதி ரிலீசாக போகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பார்த்திபன் நடிப்பில் சிங்கிள் ஷாட் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார். சமந்தாவின் யசோதா, சபரி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.

சூப்பர் ஸ்லிம்
உடல் எடை அதிகரித்து இருக்கிறார் என கிண்டல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார். அவர் வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோ இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்களே இது வரலக்ஷ்மி சரத்குமாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வில்லாக வளைந்து
சுவற்றில் காலை வைத்து தலை கீழாக கவிழ்ந்தபடி கைகளை ஊன்றிய நிலையில், தனது கால்களை நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்து வரலக்ஷ்மி செய்துள்ள வெறித்தனமான உடற்பயிற்சியை பார்த்தாலே ரசிகர்களுக்கு ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்கிற மோடிவேஷன் ஏற்பட்டு விடும். அந்தளவுக்கு ஒரு வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.

குவியும் லைக்ஸ்
நடிகை விமலா ராமன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் வரலக்ஷ்மி சரத்குமாரின் இந்த டெடிகேஷனையும் டிரான்ஸ்ஃபர்மேஷனையும் பார்த்து வியந்து லைக் போட்டுள்ளனர். மேலும், லட்சக் கணக்கில் லைக்குகளும், ஆயிரக் கணக்கில் கமெண்ட்டுகளும் வரலக்ஷ்மி சரத்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்த வருகின்றன.


Click it and Unblock the Notifications











