வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தத்வமசி…. சூப்பரான கருத்துடன் வெளியான மோஷன் போஸ்டர் !

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், வில்லி கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சவாலான கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று இவர் நடிப்பதால் இதுபோன்ற கதைகள் இவரைத் தேடியே செல்கின்றன.

தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படமாக இது உருவாகி வரும், தத்வமசி படத்தின் கான்செப்ட் போஸ்டர் இன்று வெளியானது.

தத்வமசி

தத்வமசி

ரோக் திரைப்படத்தில் நடித்து பிரபலமான இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் தத்வமசி. இந்த படத்தின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள் என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

4 மொழிகளில்

தத்வமசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும். விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள தத்வமசி, அதன் புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

ராதாகிருஷ்ணா தெலு தனது RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார், ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய. மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படத்தில் பணிபுரிகிறார், சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றுகிறார். இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

வாரிசு நடிகை

வாரிசு நடிகை

தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பல பேர் கோலிவுட்டின் கமர்சியல் சூறாவளியில் சில படங்களிலேயே காணாமல் போய் விடுகிறார்கள். வாரிசு நடிகையாக சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சர்க்கார் பாராட்டப்பட்டது

சர்க்கார் பாராட்டப்பட்டது

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, விரைவிலேயே தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் குறிப்பிடும் படியாக நடித்துள்ளார். அதே நேரத்தில் சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வரலட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து, சிறப்பாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் வரலட்சுமிக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றனர்.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

தற்போது, காட்டேரி, பாம்பன், பிறந்தால் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். Lagaam என்ற கன்னட படம் ஒன்றிலும், NBK தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X