கல்யாணம் பண்ணா யாரு நல்லா இருப்பாங்க.. என்ன திடீர்னு வரலட்சுமி இப்படியொரு வீடியோ போட்டிருக்காரே!

சென்னை: நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியின் மகளான வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கில் வெளியிட்டுள்ள திருமணம் குறித்த வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாடுகளுக்கு டூர் அடித்து, ஆயில் மசாஜ் செய்த வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை பொறாமை கொள்ள செய்தனர்.

Varalakshmi Sarathkumar says whose life will happy in Getting Married video makes fans laugh

இந்நிலையில், திருமணம் செய்துக் கொண்டால் யாருக்கு லைஃப் நல்லா இருக்கும் என்கிற கேள்வியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

39 வயசாகுது: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு 39 வயதாகும் நிலையில், ஒரு வழியாக திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். கடந்த 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் இவர் நடித்த பல படங்கள் ஃபிளாப்பான நிலையில், தெலுங்கில் அதிகமாக கவனம் ஈர்த்து வருகின்றார். சமீபத்தில் வெளியான சபரி படம் கூட ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கோலாய் உடன் நிச்சயம்: கடந்த மார்ச் மாதம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி சரத்குமார் நிச்சயம் செய்துக் கொண்டார். விஷாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், பல ஆண்டுகளாக நிக்கோலாய் என்பவரை தான் வரலட்சுமி சரத்குமார் காதலித்து வருவதாக கூறப்பட்டது. திருமணத்துக்கு முன்பாக வருங்கால கணவருடன் அதிகம் சேர்ந்து சுற்றி வரும் வர்லட்சுமியை சோஷியல் மீடியாவில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Varalakshmi Sarathkumar says whose life will happy in Getting Married video makes fans laugh

கல்யாணம் நடந்தால் யாருக்கு நல்லது?: நிச்சயம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் வரலட்சுமி சரத்குமார் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது திருமணமானால் யாருக்கு நல்லது என வீடியோ ஒன்றை வெளியிட்டு ஃபன் செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இவங்களுக்குத்தான் நல்லது: திருமணம் நடந்தால் யாருக்கு நல்லது? என்கிற கேள்வியுடன் தொடங்கும் அந்த வீடியோவில் திருமணம் நடந்தால் புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராஃபர், சமையல்காரர், மண்டபக்காரர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சேலை கட்டி விடுபவர்கள் போன்றவர்களுக்குத்தான் நல்லது. அதனால், திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என தெலுங்கில் வீடியோ வெளியிட்டு ஃபன் செய்துள்ளார்.

சமந்தா போல: கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வித்தியாசமான ஹேர்கட்டில் டிசர்ட் அணிந்து வரலட்சுமி சரத்குமார் இருப்பதை பார்த்த ரசிகர்கள் சமந்தா மாதிரி இருக்கீங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஹீரோவின் அக்காவாக வரலட்சுமி சரத்குமார் நடித்த ஹனுமான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து தனுஷின் ராயன் படத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தனுஷுடன் ஐபிஎல் போட்டியையும் கண்டு ரசித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X