என்ன இதெல்லாம்..அந்த இடத்தில் டாட்டூ..வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை!

நடிகை : நடிகை வரலட்சுமி விவகாரமான இடத்தில் டாட்டூ குத்தி ரசிகர்களுக்கு வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் வரலட்சுமி.

அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் கமிட்டான வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

பாலிவுட்டை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

மிரட்டலான வில்லி

மிரட்டலான வில்லி

போடா போடி, தாரைதப்பட்டை போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் வரலட்சுமி. கதாநாயகி கதாபாத்திரத்தை விட இவருக்கு வில்லி கதாபாத்திரம் பக்காவாக பொருந்தியது. விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்தபடங்களை தொடர்ந்து இவர் அதிகமாக நெகட்டிவ் கதாபாத்திரத்திலே நடித்து வருகிறார்.

இரவின் நிழல் படத்தில்

இரவின் நிழல் படத்தில்

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இரவின் நிழல் படத்தில் பெண் சாமியார் ரோலில் நடித்திருந்தார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். தற்போது இவர் பாம்பன், பிறந்தாள் மகாலட்சுமி, சபரி, என்ற தமிழ் படத்திலும், கலர், வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2023 வாழ்த்துக்கள் இந்த ஆண்டு அன்பும் ஒளியும் நேர்மறையும் நிறைந்ததாக அமையட்டும். தன்னம்பிக்கையுடன் முழு வேகத்தில் முன்னேறி.. சரியான அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கை.. வலுவாக இருங்கள்..பெரிய கனவு காணுங்கள்.. கடினமாக உழையுங்கள்.. கனவுகள் நனவாகும்.. ஒரு அருமையான ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த டாட்டூக்கு என்ன அர்த்தம்

மேலும், தனது முதுகில் வித்தியாசமான டாட்டூ ஒன்றையும் போட்டுள்ளார். அந்த டாட்டூ தெரியும்படி மொத்த முதுகையும் காட்டி வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் டாட்டூ குத்த வேறு இடம் இல்லை என்றும், அந்த டாட்டூக்கு என்ன அர்த்தம் என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X