எதுவா இருந்தாலும் அப்பா, அம்மாட்ட கம்ப்ளைண்ட் செய்றாரு.. கணவர் பற்றி வரலட்சுமி சரத்குமார் ஓபன்
சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவர்களது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது இரண்டு பேரும் சுமூகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். மணமுடிந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் வரலட்சுமி. கடைசியாக அவரது நடிப்பில் மத கஜ ராஜா உள்ளிட்ட படங்கள் வெளியான. மேலும் இப்போது அவர் விஜய்யுடன் ஜன நாயகன் திரைப்படத்திலும் நடித்துவருவதாக தெரிகிறது. அதேபோல் தமிழில் ஏற்கனவே அவர் ஃபீனிக்ஸ் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமும் இந்த வருடத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சரத்குமார். பல தொழில்கள் செய்த அவர் சினிமா மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் போராடி வாய்ப்புகளை பெற்று வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அப்படி சில படங்களில் நடித்த அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரை பெற்றார். ஒருகட்டத்தில் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனையடுத்து அவர் தற்போது பிஸியான குணசித்திர நடிகராக வலம் வந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.
சரத்குமாரின் குடும்பம்: சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. சில காரணங்களால் சாயா தேவியை பிரிந்த சரத்; அடுத்ததாக நடிகை ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராதிகாவை அவர் திருமணம் செய்துகொண்டாலும் சாயா தேவிக்கு ஒன்று என்றால் சரத்குமார்தான் நிற்கிறார். மேலும் ராதிகாவும்கூட சாயாவுடன் சுமூகமான உறவையே கொண்டாடியிருக்கிறார். மேலும் இரண்டு குடும்பமும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதோடு; சினிமாவில் வரலட்சுமி நடிப்பதற்கு சரத்குமாரிடம் பேசி சம்மதம் வாங்கியதே அவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஒற்றுமையோடு இருக்கிறார்கள்.

வரலட்சுமியின் சினிமா பயணம்: வரலட்சுமி முதலில் போடா போடி படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே பாய்ஸ், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களின் வாய்ப்புகள் அவருக்கு சென்றன ஆனால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போடா போடி படத்தில் வருவுக்கு நல்லதொரு வரவேற்பே கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தெலுங்கு மொழியிலும் பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். இதற்கிடையே நடிகர் விஷாலை வரலட்சுமி காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. அதுமட்டுமின்றி நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமாருக்கும், விஷாலுக்கு பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர்கள் காதல் முறிவுக்கு வந்ததாகவும் ஒரு கிசுகிசு பரவியது. அதுகுறித்து விஷால் எதுவுமே வாய் திறக்காத சூழலில்; வரலட்சுமி தனது செயலால் முற்றுப்புள்ளி வைத்தார்.
வரலட்சுமியின் திருமணம்: அதன்படி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. ஒரு மகளும் இருக்கிறார். வருவின் காதலை தெரிந்துகொண்ட சரத்குமார் உடனடியாக தனது சம்மதத்தை தெரிவித்தார். அதனையடுத்து தாய்லாந்தில் வைத்து இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் சரத்குமாரின் இரண்டாவது மனைவியான ராதிகா அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது சரத்குமார் குடும்பமும், வரலட்சுமியின் குடும்பமும் நல்லபடியாக இருந்துவருகின்றன. முக்கியமாக சரத்குமார் குடும்பத்துடன் நிக்கோலாய் ரொம்பவே செட் ஆகிவிட்டார். கடந்த பொங்கல் அன்றுகூட அவர்கள் வீட்டில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதேபோல் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவியும் நிக்கோலாயை ஒரு பேட்டியில் ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமியின் பேட்டி: இந்நிலையில் வரலட்சுமி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நிக்கோலாய் சச்தேவை வைத்துக்கொண்டு முடியவில்லை. எதற்கெடுத்தாலும் என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வாய்ஸ் நோட் செய்து என் மீது கம்ப்ளைண்ட் பண்ணுகிறார். சரத்குமாரிடம், மாமா உங்கள் பொண்ண பாருங்களேன் என்று சிறு குழந்தை போல் சொல்கிறார். அவர்களும் இவருக்குத்தான் சப்போர்ட் செய்கிறார்கள்" என்று சொல்லியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் இது கேட்கவே அவ்வளவு க்யூட்டாக இருக்கே; நிக்கோலாய் உண்மையிலே நல்ல மனிதனாகத்தான் இருக்கிறார் என்று வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
வரலட்சுமியின் இன்னொரு பேட்டி: முன்னதாக வரலட்சுமி ராதிகாவுடன் எப்போதும் இணக்கமாகவே இருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் இணைந்து பல விழாக்களுக்கு வந்திருக்கிறார்கள். அவர் ஒரு பேட்டியில் ராதிகா குறித்து, "எனது அம்மா சாயா தேவிதான். நான் ராதிகாவை ஆன்ட்டி என்றுதான் அழைப்பேன். உடனே சிலரோ நீங்கள் எப்படி ராதிகாவை ஆன்ட்டி என்று அழைக்கலாம் என்று கேட்கிறார்கள். அவர் எனது அம்மா இல்லையே. எல்லோருக்கும் ஒரு அம்மாதானே இருக்க முடியும். அப்படித்தான் எனக்கும் ஒரு அம்மாதான் இருக்கிறார். நான் ராதிகாவை அம்மா என்று அழைக்காவிட்டாலும் எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. குரைப்பவர்கள் குரைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதைப் பற்றி கவலையில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

ராதிகாவின் மகளும் அப்படித்தான்: வரலட்சுமி மட்டுமின்றி ராதிகாவுக்கு பிறந்தவரான ரயானும் வரு மீது மிகப்பெரிய பாசம் வைத்திருப்பவர். அவர்கூட சமீபத்திய பேட்டியில் பேசுகையில், "வரலட்சுமியின் திருமணத்தில் எனது அம்மா ரொம்ப ஈடுபாடாக இருந்தார். அதனைப் பார்த்து பலரும் ராதிகாவுக்கு பெரிய மனசு என்றார்கள். ஆனால் அது அம்மாவின் இயல்பு. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. நானும், வரலட்சுமியும் ரொம்பவே க்ளோஸாக இருப்போம். திருமணத்துக்கு பிறகு பொங்கலுக்குக்கூட அவரது கணவரோடு எங்கள் வீட்டுக்கு வரு வந்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரைக்கும் எனது குடும்பம்தான் எல்லாமே. என்னுடைய அப்பா, அம்மா, வரலட்சுமி பற்றி யாராவது தவறாக பேசினால் சும்மா மட்டும் விடவே மாட்டேன். அப்படி பேசுபவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். அம்மாவும் கொடுப்பார். அப்போது அப்பாவோ, 'ஐயோ இந்த ரெண்டு பேரையும் வெச்சிக்கிட்டு என்னால முடியல' என புலம்புவார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











