வரலட்சுமி சரத்குமாருக்கு என்னம்மா லிப் கிஸ் அடிக்கிறாரு.. நிச்சயதார்த்த வீடியோவை பார்த்தீங்களா?

சென்னை: 39 வயதாகும் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு வழியாக திருமணம் செய்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார். சமீபத்தில் அவரது நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார்.

சமீபத்தில், குல தெய்வ கோயிலுக்குச் சென்று கும்பாபிஷேகம் எல்லாம் ஜோராக செய்து வந்த நிலையில், மகளின் நிச்சயதார்த்தத்தையும் கையோடு நடத்தி விட்டார் சரத்குமார். அதன் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ளார்.

Varalakshmi Sarathkumar shares her Engagement video

41 வயது மாப்பிள்ளை: நடிகை வரலட்சுமி சரத்குமார் பல ஆண்டுகளாக தனது காதலனை மீடியா கண்களுக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து வைத்திருந்த நிலையில், நிச்சயதார்த்தத்தின் போது தான் அதிகாரப்பூர்வமாக அவரை வெளி உலகிற்கு காட்டியுள்ளார். வரலட்சுமி சரத்குமாருக்கு 39 வயதாகும் நிலையில், அவரது வருங்கால கணவர் நிகோலாய் சச்தேவிற்கு 41 வயதாகிறது.

2வது திருமணம்: கவிதா எனும் கனடா நாட்டு அழகியை காதலித்து 15 ஆண்டுகளுக்கு முன்பே நிகோலாய் திருமணம் செய்துக் கொண்டார். அந்த தம்பதியினருக்கு வயதுக்கு வந்த ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாரை 2வதாக நிக்கோலாய் சச்தேவ் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயில்வான் ரங்கநாதன் தனது லேட்டஸ்ட் வீடியோவிலும் இதுதொடர்பாக பேசியிருக்கிறார்.

Varalakshmi Sarathkumar shares her Engagement video

நிச்சயதார்த்த வீடியோ: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "சரட்டு வண்டியில்" பாடலை பின்னணி இசையாக போட்டு எடிட் செய்யப்பட்ட நிச்சயதார்த்த வீடியோவை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போட்டோகிராஃபராக மாறிய சரத்குமார்: மகளுக்காக நடிகர் சரத்குமார் போட்டோகிராஃபாராக மாறியிருக்கிறார் அந்த வீடியோவில். மேலும், அம்மா சாயா தேவி, சித்தி ராதிகா என அனைவரும் சந்தோஷமாக நிகழ்ச்சியில் பங்கேற்றதும் வரலட்சுமியை அலேக்காக தூக்கிக் கொண்டு மாப்பிள்ளையிடம் அழைத்துச் சென்ற காட்சிகள் வேறலெவல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Varalakshmi Sarathkumar shares her Engagement video

வரலட்சுமிக்கு லிப் கிஸ்: சமீப காலமாக நிச்சயதார்த்தத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, ரிங் போடும் காட்சிகளை கூட காட்டாமல் குறிப்பாக கல்யாணம் ஆகப் போகும் இருவரும் ஒருவரை ஒருவர் லிப் கிஸ் அடித்துக் கொள்ளும் காட்சிகளை இடம்பெற செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.

மோசமான கமெண்ட்ஸ்: வரலட்சுமி சரத்குமார் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கோலாகலமாக நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். அதற்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். வரலட்சுமியின் ரசிகர்கள் மணமக்கள் இருவரையும் வாழ்த்தி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.

Varalakshmi Sarathkumar shares her Engagement video

தனுஷ் படத்தில்: தெலுங்கில் தூள் கிளப்பி வரும் வரலட்சுமி சரத்குமார் மாரி 2 படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்தில் வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரும் அந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X