நட்சத்திர ஜன்னலில் பாட்டு.. குடும்பத்துடன் வைப் பண்ண வரலட்சுமி சரத்குமார்.. பூர்வீக வீட்டை பாருங்க!

சென்னை: சிராவயல் ஊரில் உள்ள குலதெய்வம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை குடும்பத்துடன் நடிகர் சரத்குமார் சமீபத்தில் நடத்திய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில், ஒட்டுமொத்த சரத்குமாரின் குடும்பமே கலந்து கொண்ட 3 நாட்கள் படப்பிடிப்பு எல்லாம் இல்லாமல் சொந்த ஊரில் குடும்பமாக அரட்டை அடித்து மகிழ்ந்த வீடியோவை வரலட்சுமி சரத்குமார் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சரத்குமார் எப்படி நாட்டாமை, சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருந்தாரோ நிஜத்திலும் அதே போலத்தான் வாழ்ந்து வருகிறார். முதல் மனைவியின் மகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் இரண்டாவது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் என பலருடன் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.

Varalakshmi Sarathkumar shares how she enjoys 3 days with her whole family video now

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நடிகர் சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

டிரெண்டான புகைப்படங்கள்: குலதெய்வ கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Varalakshmi Sarathkumar shares how she enjoys 3 days with her whole family video now

3 நாட்கள் ஒரே அரட்டை: சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட மூவரும் சினிமாவில் செம பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு 3 நாட்கள் சொந்த பந்தங்களுடன் ஒன்றுக்கூடி அட்டகாசம் செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு ரொம்பவே சந்தோஷமாக இருந்தேன் என வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

பூர்வீக வீட்டில்: சொந்த ஊரில் உள்ள பெரிய பூர்வீக வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ளார். கோயிலில் கும்பாபிஷேகம் செய்யும் போது அப்பா சரத்குமார் சூரத்தேங்காய் உடைக்கும் போது சாமி வந்தது போல ஆட்டம் போட்டு வரலட்சுமி சரத்குமார் வைப் செய்வதெல்லாம் வேறலெவல்.

நட்சத்திர ஜன்னலில்: சூரியவம்சம் படத்தில் இடம்பெற்ற நட்சத்திர ஜன்னலில் பாடலை போட்டு இந்த வீடியோவை கச்சிதமாக எடிட் செய்து வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவை விட தெலுங்கில் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ள வரலட்சுமி சரத்குமார் எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் மீண்டும் குடும்பங்கள் எல்லாம் இதே போல அந்த விழாவில் தான் கூடும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X