சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு அடித்தது ஜாக்பாட்.. எல்லாம் திருமணமான நேரம்தான்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை வரலட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வரலட்சுமிக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டகோழி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அவர்; நல்ல நடிகை என்ற பெயரை பெற்றாலும் ஹிட் எதையும் பெற முடியவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிஸியான நடிகையாகவே வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி: இதற்கிடையே அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்தார். இரண்டு பேரின் திருமணத்துக்கும் சரத்குமார் தரப்பு பச்சை கொடி காண்பித்ததை அடுத்து அவர்களின் திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் வைத்து பிரமாண்டமாக நடந்தது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜில் ஒரு மகள் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. திருமணத்துக்கு பின்பு அனைவரும் ஒற்றுமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.

ஜன நாயகனில் வரலட்சுமி: நிக்கோலாயை திருமணம் செய்த பிறகும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் வரு. அவருக்கு கணவரும் ஃபுல் சப்போர்ட்டை தருகிறார். இப்போது விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே விஜய்யுடன் நடிக்கும் இரண்டாவது படமாவது வெற்றியடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு எகிறியிருக்கிறது.
ஹாலிவுட்டில் வரு: இந்நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் வரலட்சுமி. அதாவது இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கும் Rizana-A Caged Bird என்ற படத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மிக்கு ஜோடியாக நடிக்கிறார் அவர். இதுகுறித்து வரு கூறுகையில், "ஆஸ்கர் விருது வென்ற் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் நடிப்பது எனக்கு பெரிய் மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனக்கு ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங் படம் பிடிக்கும்.
அந்த அளவுக்கு பிடிக்கும்: அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்துமே எனக்கு மனப்பாடம். அந்த கிங்கிற்கு ஜெர்மிதான் குரல் கொடுத்திருபார். அவருடன் நடித்து ஹாலிவுட்டில் நான் அறிமுகமாவது என்னுடைய கனவு நனவான தருணம். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலக அளவில் அவர் அனைவராலும் மதிகப்படும் நடிகர். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட மேக்கிங் முகத்தை மாற்றிய சந்திரன் ருட்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் எனக்கும் பெருமை. சர்வதே திரைப்பட ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது சந்தோஷம்" என்றார்.


Click it and Unblock the Notifications











