யாரும் கிளாமருக்கு கட்டாயப்படுத்தவில்லை.. நடிகைகளுக்கு பிடித்திருக்கிறது.. வரலட்சுமி பளார்

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் தாய்லாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு முன்பு வரலட்சுமி நடித்திருந்த மதகஜராஜா திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி சக்கை போடு போட்டுவருகிறது. இந்நிலையில் வரலட்சுமி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சிம்புவை வைத்து நயன்தாராவின் கணவர் இயக்கிய படம் போடா போடி. இந்தப் படம்தான் விக்னேஷ் சிவனுக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில்தான் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடிகையாக அறிமுகமானார். இவர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர். போடா போடி படத்துக்கு முன்பு வரலட்சுமியை நோக்கி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரத் ஒத்துக்கொள்ளாததால் அந்த படங்களில் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது.

varalakshmi madhagajaraja mgr

பிஸி நடிகை: போடா போடி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் ஈர்த்தது. துறுதுறு நடிப்பு, அட்டகாசமான நடனம் என நடிகைக்குரிய அத்தனை இலக்கணங்களும் அவருக்கு இருந்ததை அடுத்து வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா வரலட்சுமியை தன்னுடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றார் வரலட்சுமி. கரகாட்ட நடனம், தைரியமாக பேச்சு என படம் முழுக்க அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்.

விஷாலுடன் காதல்?: தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு சில வாய்ப்புகள் வரலட்சுமிக்கு வந்துகொண்டிருந்தன. இதற்கிடையே அவர் விஷாலை காதலித்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க கட்டட பிரச்னையில் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் முட்டிக்கொண்டதால் இவர்களது காதல் பாதியில் முடிந்துவிட்டதாகவும் பலரும் பேசினார்கள். ஆனால் இதுகுறித்து வரலட்சுமியோ விஷாலோ பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார் வரலட்சுமி. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மேலும் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். வரலட்சுமியின் நிக்கோலாய் மீதான காதலுக்கு சரத்குமார் க்ரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து அவர்களது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் வரலட்சுமி நடித்த மதகஜராஜா படம் நேற்று முன்தினம் வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது.

வரலட்சுமி பேட்டி: இந்நிலையில் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட வரலட்சுமி பேசுகையில், "எந்தப் படத்தில்தான் கிளாமர் இல்லை. எல்லா படங்களிலும் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். சில படங்களில் அவர்களுக்கு நல்ல ரோல் இருக்கும். படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடுவார்கள்.கிளாமருக்காகத்தானே அந்தப் பாடலில் ஆடுவார்கள். அவர்கள் என்ன புர்ஹா அணிந்துகொண்டா ஆடுகிறார்கள். எந்த ஹீரோயினையும் கட்டாயப்படுத்தி கிளாமர் காட்ட சொல்வதில்லை. அவர்களுக்கே அது ஓகேயாக இருப்பதால்தான் கிளாமர் காண்பிக்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X