முரட்டுத்தனமா இருப்பாரு.. அவரைப் பற்றி தப்பா பேச முடியாது.. கணவர் பற்றி சிலாகித்த வரலட்சுமி

சென்னை: வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்போது அவர்கள் காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகின்றனர். இந்நிலையில் கணவர் பற்றி வரலட்சுமி சிலாகித்து பேசியிருக்கிறார்.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். பெரும் கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே நல்ல பழக்கம் இருக்கிறது. அவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை நிக்கோலாய் திறம்பட கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

nicholai varalakshmi sarathkumar

திருமணமாகி விவாகரத்து: நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர்.

திருமணம்: கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.அதில் இரு வீட்டாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த ரிசப்ஷனுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.

ஹனிமூன்: திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கும் சென்றிருந்தனர். இதற்கிடையே இவர்களது திருமண செலவு மட்டும் 850 கோடி ரூபாய் என்று தகவல்கள் பரவின. ஆனால் அது வெறும் வதந்தி என்று சரத்குமார் விளக்கினார். சூழல் இப்படி இருக்க திருமணத்துக்கு பிறகு வரலட்சுமியின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்த்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார் நிக்கோலாய்.

வரலட்சுமி பேட்டி: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு நிக்கோலாய் பேட்டி அளித்தார். அப்போது வீடியோ காலில் பேசிய வரலட்சுமி, "நிக்கோலாய் பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார். ஆனால் குழந்தை மனது படைத்தவர். அவருக்கு தமிழ் பேசவராவிட்டாலும் தமிழை புரிந்துகொள்வார். அவரை வைத்துக்கொண்டு தமிழில் அவரை பற்றி தவறாக பேசவே முடியாது. ஏதாவது பேசினால் என்னைப் பற்றி என்ன பேசுகிறீர்கள் என்று கேட்டுவிடுவார். அவருக்கு இப்போது நான் தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X