அமெரிக்காவில் சர்கார் ஷுட்டிங்..! வைரலாகும் வரலட்சுமியின் வீடியோ...!
சர்கார் திரைப்பட ஷூட்டிங் தொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.
Recommended Video

சென்னை: அமெரிக்காவில் நடக்கும் சர்கார் ஷூட்டிங்கில் நடிகை வரலட்சுமியும் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
விஜய்யின் 62 வது படமான சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. சென்னையில் ஷூட்டிங்கை முடித்த படக்குழுவினர் இப்போது அமெரிக்காவுக்கு பறந்துள்ளனர்.

லாஸ் வேகாஸில் இப்படத்தின் இறுதி பாடலை படமாக்குகிறார்கள், அதற்கு ஆளப்போறான் தமிழன் பாடல் புகழ் ஷோபி நடன அமைப்பு செய்கிறார். மேலும் சில காட்சிகளையும் அங்கே படமாக்குகின்றனர்.
இன்று தொடங்கும் படப்பிடிப்பு வரும் 11ஆம் தேதி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகை வரலட்சுமி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், வேகாஸ் காலிங்... என்ற கேப்ஷனோடு, ஷூட்டிங்கிற்கு செல்வதாகவும், மிக எதிர்பார்ப்போடு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். வரலட்சுமி இப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஏஆர்.முருதாஸ் இயக்குகிறார். இசைப்புயல் ஏஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ கருப்பய்யா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











