திருமணத்துக்கு பின் வரலட்சுமி செஞ்சிருக்கத பாருங்க.. மேடம் டிராகன் ரசிகையாகிட்டாங்களே
சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் தாய்லாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு முன்பு வரலட்சும் நடித்திருந்த மதகஜராஜா திரைபசெ்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் வரலட்சுமியின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சிம்புவை வைத்து நயன்தாராவின் கணவர் இயக்கிய படம் போடா போடி. இந்தப் படம்தான் விக்னேஷ் சிவனுக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில்தான் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடிகையாக அறிமுகமானார். இவர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர். போடா போடி படத்துக்கு முன்பு வரலட்சுமியை நோக்கி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரத் ஒத்துக்கொள்ளாததால் அந்த படங்களில் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது.
பிஸி நடிகை: போடா போடி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் ஈர்த்தது. துறுதுறு நடிப்பு, அட்டகாசமான நடனம் என நடிகைக்குரிய அத்தனை இலக்கணங்களும் அவருக்கு இருந்ததை அடுத்து வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா வரலட்சுமியை தன்னுடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றார் வரலட்சுமி. கரகாட்ட நடனம், தைரியமாக பேச்சு என படம் முழுக்க அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்.

விஷாலுடன் காதல்?:தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு சில வாய்ப்புகள் வரலட்சுமிக்கு வந்துகொண்டிருந்தன. இதற்கிடையே அவர் விஷாலை காதலித்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க கட்டட பிரச்னையில் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் முட்டிக்கொண்டதால் இவர்களது காதல் பாதியில் முடிந்துவிட்டதாகவும் பலரும் பேசினார்கள். ஆனால் இதுகுறித்து வரலட்சுமியோ விஷாலோ பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார் வரலட்சுமி. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மேலும் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். வரலட்சுமியின் நிக்கோலாய் மீதான காதலுக்கு சரத்குமார் க்ரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து அவர்களது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தி பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் வரலட்சுமி நடித்த மதகஜராஜா சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ஹிட்டானது. வரலட்சுமியும் அதில் கொஞ்சம் ஓவராகவே கிளாமர் காண்பித்திருந்தார்.
டாட்டூ போட்டுக்கொண்ட வரலட்சுமி: அடுத்ததாக அவரது நடிப்பில் ஜன நாயகன், பீனிக்ஸ் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் வரலட்சுமி தனது முதுகில் பெரிய டிராகன் டாட்டூவரை போட்டிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதேபோல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் அவருக்கு ஒருவர் மேக்கப் போடுகிறார். அதனை மற்றவர்கள் கலாய்ப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வரலட்சுமி டாட்டூ குத்திக்கொண்ட புகைப்படமும், அந்த வீடியோவும் தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய டிராகன் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











