Varalakshmi - சிம்புவுடன் திருமணமா?.. ட்ரெண்டாகும் வரலட்சுமியின் பேச்சு.. அதுல எல்லாம் ஆர்வமே இல்லையாம்
சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கும் சிம்புவுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நிலைமை இப்படி இருக்க வரலட்சுமி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவானவர் சரத்குமார். பல ஹிட் படங்களை கொடுத்த சரத்குமார் இப்போது குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடப்த்தக்கது.
பாலா படத்தில் நிரூபித்த வரலட்சுமி: சூழல் இப்படி இருக்க பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த படமான தாரை தப்பட்டை படத்தில் கமிட்டானார் வரலட்சுமி. பாலா படம் என்றாலே நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கும் என்ற விதியின்படி இந்தப் படத்திலும் வரலட்சுமிக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் இருந்தது. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார் வரலட்சுமி. அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அத்தனையிலும் அதகளம் செய்தார். இருப்பினும் தாரை தப்பட்டை போதிய ரசிகர்களை கவரவில்லை.
போதிய வாய்ப்பு இல்லை: தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ், ஹனுமான் படங்களில் நடித்தார்.
சிம்புவுடன் திருமணம்: இதற்கிடையே வரலட்சுமி விஷாலை காதலிக்கிறார் என்று கிசுகிசு பரவியது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேருமே எதுவும் வாய் திறக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சிம்புவுக்கும், வரலட்சுமிக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஈடுபட்டிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின.
ட்ரெண்டாகும் வரலட்சுமியின் பேச்சு: இந்நிலையில் திருமணம் குறித்து வரலட்சுமி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அந்த வீடியோவில், "புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன். கன்னிராசி பட கதையை படித்தபோது ரொம்பவே பிடித்துவிட்டது. இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினேன். காதல் மற்றும் திருமணத்தை பற்றிய படம்தான் கன்னிராசி. ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை" என்றார்.
பிறகு எப்படி திருமணம்: இதனை பார்த்த ரசிகர்கள் திருமணம் மீதே நம்பிக்கை இல்லை என்று ஆணித்தரமாக கூறியவர் எப்படி சிம்புவை திருமணம் செய்துகொள்வார். ஒருவேளை வரலட்சுமிக்கும் சிம்புவுக்கும் திருமணம் என்று பரவிய தகவல் வெறும் வதந்தியாக இருக்குமோ என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











