காற்றும் நுழைய முடியாது.. வரலட்சுமி - நிக்கோலாயின் அசத்தல் க்ளிக்ஸ்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்துவருகிறார். பெரும் கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே நல்ல பழக்கம் இருக்கிறது. அவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை நிக்கோலாய் திறம்பட கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalaxmi Nicholai Sarathkumar

திருமணமாகி விவாகரத்து: நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர். அதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணம்: தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டாம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.அதில் இரு வீட்டாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த ரிசப்ஷனில் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.

Varalaxmi Nicholai Sarathkumar

ஹனிமூன்: திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கும் சென்றிருந்தனர். இதற்கிடையே இவர்களது திருமண செலவு மட்டும் 850 கோடி ரூபாய் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்த சரத்குமார், "எனது மகள் திருமணத்துக்கு 800 கோடி ரூபாய்வரை செலவு ஆகியிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அந்த செய்தி முற்றிலும் தவறானது" என்று கூறியிருந்தார்.

வரலட்சுமி இன்ஸ்டாகிராம்: ஹனிமூனை முடித்த கையோடு இருவரும் ஜோடியாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். திருமணத்துக்கு பிறகும் வரலட்சுமி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் வரலட்சுமி தனது கணவர் நிக்கோலாயுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்தபடி கூலர்ஸுடன் கேஷுவலாக இருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X