வரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்

By Siva

Recommended Video

ஹன்சிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய வரலட்சுமி- வீடியோ

சென்னை: கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்களில் பிசியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி.

நாகேஸ்வர ரெட்டி இயக்கும் இந்த படத்தின் ஹீரோயின் ஹன்சிகா.

வரலட்சுமி

வரலட்சுமி

முதன் முதலாக தெலுங்கு படத்தில் நடிப்பதை நினைத்து வரலட்சுமி சரத்குமார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். ஹீரோயின் இல்லாவிட்டாலும் தன் கதாபாத்திரத்தில் நச்சென்று நடித்து ரசிகர்களை கவரும் வித்தை வரலட்சுமிக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா

ஹன்சிகா

வரலட்சுமி எந்த படத்தில் நடித்தாலும் ஹீரோயினை ஓரங்கட்டிவிட்டு தன்னை பற்றி பேச வைத்துவிடுவார். சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் ஹீரோயின் கீர்த்தியை யாரும் கண்டு கொள்ளவில்லை. மாறாக வில்லி வரலட்சுமியின் கதாபாத்திரங்கள் பற்றி தான் அதிகம் பேசினார்கள். ஹீரோவுக்கு அடுத்த படியாக வரலட்சுமி பற்றி தான் ரசிகர்கள் பேசினார்கள்.

நடிப்பு

நடிப்பு

சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் வரலட்சுமி தனது திறமையான நடிப்பால் கீர்த்தியை ஓரங்கட்டினார். இதனால் கீர்த்திக்கு வருத்தம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சந்தீப் கிஷன் படத்தில் நிச்சயம் ஹன்சிகாவை விட வரலட்சுமி அதிகம் பேசப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் நடிப்பு அப்படி.

பிப்ரவரி

பிப்ரவரி

தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல். படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இரண்டு அல்லது 3 கட்டங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து கோடை கால விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X