நிச்சயம்தானே ஆச்சு.. வருங்கால கணவரோடு ஜாலியோ ஜிம்கானா.. வரலட்சுமி சரத்குமாரின் க்யூட் பிக்ஸ்!

சென்னை: சரத்குமார் மற்றும் சாயாதேவி தம்பதிகளின் மகளான வரலட்சுமி சரத்குமார் தனது வருங்கால கணவர் நிக்கோலாயுடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடி வருகிறார். இணையத்தில் வெளியான அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், நிச்சயம்தானே ஆச்சு அதுக்குள்ள இப்படியா என கேட்டு வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Varalaxmi Sarathkumar and Nicholai Sachdev latest pic trending on social media

வில்லியாக: ஹீரோயினாக நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார், சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லி ஆகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தையும் தென் இந்திய சினிமாவில் பிடித்துள்ளார். அண்மையில், இவர் நடிப்பில், வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

Varalaxmi Sarathkumar and Nicholai Sachdev latest pic trending on social media

வருங்கால கணவர்: படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபரான நிகோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் பெண் இருக்கும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

Varalaxmi Sarathkumar and Nicholai Sachdev latest pic trending on social media

நிச்சயம் தானே ஆச்சு: இந்நிலையில் நடிகை வரலட்சுமி தனது வருங்கால கணவருடன் ஜாலியாக சம்மரை கொண்டாடி வருகிறார். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் திருமணம் எப்போது என்றும், நிச்சயம்தானே ஆச்சு அதுக்குள்ள ஜாலியோ ஜிம்கானாவா என்றும் கேட்டு வருகின்றனர். சோஷியல் மீடியாவில் இவர்களின் போட்டோ டிரெண்டாகி வருகிறது.

அவர் மீது காதல்: அண்மையில் தனது வருங்கால கணவர் குறித்து பேசிய வரலட்சுமி, அவரை 16 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தெரியும், நார்வேயில் நாங்கள் பேமிலி டூர் போயிருந்தோம். அங்கு வைத்து தான் அப்பா அம்மா முன்னாடி என்னிடம் நிக்கோலாய் காதலை சொன்னார். அவர் என் மீது வைத்து இருக்கும் பாசம், அக்கறை, என்னுடைய ப்ரொபஷன் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு போன்றவற்றால் எனக்கும் அவர் மீது காதல் வந்தது என்றார். இவர்களின் திருமணம் விரைவில் நடக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X