என்னாது கிரிக்கெட் வீரருடன் கல்யாணமா..? முட்டாள்தனமான வதந்திகள்.. பிரபல நடிகை காட்டமான போஸ்ட்!

By

சென்னை: தனது திருமணம் குறித்த செய்திக்கு பிரபல நடிகை காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வரலட்சுமி.

தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் உட்பட சில படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, விஷாலின் சண்டக்கோழி 2 உட்பட சில படங்களில் வில்லியாகவும் நடித்தார்.

பாதுகாப்பு அமைப்பு

பாதுகாப்பு அமைப்பு

பிரபல நடிகர் சரத்குமார் மகளான இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது காட்டேரி, பாம்பன்', சேஸிங், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களிலும், தெலுங்கில், க்ராக் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர், சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பையும் நடத்தி வருகிறார்.

எப்போது நடக்கும்

எப்போது நடக்கும்

நடிகை வரலட்சுமிக்கும் விஷாலுக்கும் காதல் என நீண்ட ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. பிறகு இவர்கள் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது. பிறகு விஷாலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.

திருமணம்

திருமணம்

இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்குத் திருமணம் நடக்க இருப்பதாக பரபரப்பானச் செய்திகள் வெளியாயின. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் அவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர்தான் அவர் திருமணம் செய்துகொள்ளப் போகும் மாப்பிள்ளை என்றும் இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் பேசிவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

இவ்வளவு தீவிரம்

இவ்வளவு தீவிரம்

திருமணத்துக்குப் பிறகு நடிகை வரலட்சுமி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தச் செய்தியை மறுத்துள்ளார், நடிகை வரலட்சுமி. என் திருமணத்தில் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்று அவர் காட்டமாகவும் கேட்டுள்ளார். இதுபற்றி தனது சமூக வலைத்தில் கூறியிருப்பதாவது:

கூரை மீது ஏறி

கூரை மீது ஏறி

'எனது திருமணம் பற்றி நான் ஏன் கடைசியாக அறிந்திருக்கிறேன்? ஹாஹாஹா அதே முட்டாள்தனமான வதந்திகள்தான். நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள். நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்றால், என் வீட்டின் கூரை மீது ஏறி நின்று அறிவிப்பேன். இதை எழுதும் அனைத்து மீடியாவுக்கும் நான் சொல்வது, எனக்குத் திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கும் முழுக்குப் போடப் போவதில்லை. இவ்வாறு காட்டமாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X