அப்பா முன்னாடி தான் ப்ரோபோஸ் பண்ணாரு..பயங்கரமா அழுதுவிட்டேன்.. வரலட்சுமி சரத்குமார் பேட்டி!
சென்னை: சரத்குமார் மற்றும் சாயாதேவி தம்பதிகளின் மகளான வரலட்சுமி சரத்குமார் தனது வருங்கால கணவர் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். நிக்கோலாய், என் அப்பா அம்மா முன்னாடி தான் என்னிடம் காதலை சொன்னார். அவர் என் மீது வைத்து இருக்கும் பாசம், அக்கறை போன்றவற்றால் எனக்கும் அவர் மீது காதல் வந்தது என்று கூறியுள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் சிம்புவிற்கு ஜோடியாக அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மொழியை தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

வில்லியாக: கதையின் நாயகியாகவும் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லியாகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தையும் தென் இந்திய சினிமாவில் பிடித்துள்ளார். அண்மையில், இவர் நடிப்பில், வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
நிச்சயதார்த்தம்: படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபரான நிகோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் பெண் இருக்கும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
காதலை சொன்னார்: இந்நிலையில் நடிகை வரலட்சுமி தனது வருங்கால கணவர் குறித்து பல விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார். அதில், நான் 16 ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலாயை சந்தித்து பேசி இருக்கிறேன் மற்றபடி எந்தவிதமான பழக்கமும் இல்லை.அந்த நேரத்தில் நிக்கோலாய் அவருடைய மனைவியோடு தான் வாழ்ந்து வந்தார். எங்களுக்குள் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது. பிறகு பல ஆண்டுகள் கழித்து நார்வேயில் நாங்கள் பேமிலி டூர் போயிருந்தோம். அங்கு வைத்து தான் அப்பா அம்மா முன்னாடி என்னிடம் நிக்கோலாய் காதலை சொன்னார். அவர் என் மீது வைத்து இருக்கும் பாசம், அக்கறை, என்னுடைய ப்ரொபஷன் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு போன்றவற்றால் எனக்கும் அவர் மீது காதல் வந்தது.
பிஸ்னஸ் மேன்: மேலும் தனது வருங்கால கணவர் குறித்து பேசிய வரலட்சுமி, நிக்கோலாய் ஒரு தொழிலதிபர் ஆர்ட் கேலரி வைத்து இருக்கிறார். அவரின் அப்பா தொடங்கிய அந்த கேலரியை, அப்பாவின் மறைவிற்கு பிறகு தனது16 வயதில் இருந்து கவனித்து வருகிறார். அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவளின் மகளுக்கும் எனக்கும் ஒரு நல்ல பாண்டிங் இருக்கிறது. இந்த காலத்தில் அப்படி ஒரு பெண்ணை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என்றார்.
எனக்கும் ரொமான்ஸ் வரும்: என்னை பார்த்து அனைவரும் ரூடான பெண் என்று தான் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி கிடையாது நான் ரொம்ப ரொமான்டிக்கான ஆளு, அதை வெளிப்படுத்துவதற்கு எனக்கு சரியான நபர் இதுவரை வந்தது இல்லை இப்போது தான் அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நான் மட்டும் இல்லை ஒவ்வொரு பெண்ணும் ரொமான்டிக்கானவர்கள் தான், அவருக்கு கிடைக்கும் பாட்னரை பொருத்து அது வெளிப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











