கணவருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சர்கார் வில்லி.. ரியல் சர்காரே அமைச்சிட்டாரே!
சென்னை: நடிகையாக மட்டுமின்றி விஜய்யின் தீவிர ரசிகையாக பல வருடங்களாக உள்ளவர் தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாகவே நடித்து மாஸ் காட்டினார். வரிசையாக திரையுலக நட்சத்திரங்கள் அனுமதி வாங்கி முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வரும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் சிஎம் விஜய்யை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
சமந்தா, கீர்த்தி சுரேஷ், சினேகா என விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகைகள் எல்லாம் வரிசையாக முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வருகின்றனர். ஜனநாயகன் படத்துக்குப் போட்டியாக பராசக்தி படத்தை இறக்கிய சிவகார்த்திகேயனே நேற்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் சென்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து க்யூட்டாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சற்றுமுன் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.
கணவருடன் முதல்வரை பார்த்த வரு: சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படத்தில் பாப்பா கதாபாத்திரத்தில் அரசியல் வில்லியாக நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். முதலமைச்சராக மாறியுள்ள தளபதி விஜய்யை பலரும் நேரில் சென்று சந்தித்து வரும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ் உடன் சென்று பார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

விஜய்யுடன் வரலட்சுமி கணவர்: கடந்த 2024ம் ஆண்டு வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவின் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து தனது கணவருடன் பல வெளிநாடுகளுக்குச் சென்று போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது முதலமைச்சர் விஜய்யை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளார். விஜய்யுடன் நிக்கோலாய் சச்தேவ் இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இயக்குநர் அவதாரம்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். விஷால், விஜய், தனுஷ், பாலய்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி இயக்கத்திலும் ஆர்வம் கொண்ட வரலட்சுமி சரத்குமார் எஸ். சரஸ்வதி என்கிற படத்தை இயக்கி இந்த ஆண்டு நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் ரிஸானா - எ கேஜ்ட் பேர்ட் எனும் இலங்கை படம் உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications