Varalaxmi Sarathkumar: நீங்கள் என்னோட இன்னொரு அம்மா.. ராதிகா குறித்து பேச பேச அழுத வரலட்சுமி சரத்குமார்..

ஹைதராபாத்: வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகம் ஆகவுள்ள படம் சரஸ்வதி. இந்த படம் வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்து தயாரித்தும் உள்ளார். பிரியாமணி, பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடித்துள்ளனர். இப்படி இருக்கையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி சரத்குமார், ராதிகா குறித்து பேசுகையில் மிகவும் எமோஷனலாகி அழுதார்.

அதாவது ராதிகா சரத்குமார் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே ஒரு முறை, நான் ராதிகாவை ஆண்ட்டி என்றுதான் அழைப்பேன். அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி. அதற்காக நான் அவர்களை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று இல்லை. அதேபோல் ராதிகாவின் குழந்தைகளும் நாங்களும் ஒன்றாகத்தான் வளர்ந்தோம். எங்களுக்கு இடையில் நல்ல அன்பும் அக்கறையும் எப்போதும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இப்படி இருக்கையில் ராதிகா குறித்து சரஸ்வதி படத்தின் ப்ரோமோசனில் தெரிவித்துள்ள விஷயங்கள் பலருக்கும் சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. அதாவது, " சில நேரங்களில் நீங்கள் குடும்பத்திற்காக நிற்கவில்லை என்றாலும், குடும்பம் உங்களுக்காக நிற்கும். அப்படி எனக்காக நின்றவர் தான் ராதிகா. அவர் எனக்கு மூன்றாவது பெற்றோர்.

Varalaxmi Sarathkumar Mentions Radhika Sarathkumar is Her Third Parent at Saraswathi Movie Pre-Release Event

அழுத வரலட்சுமி சரத்குமார்: இன்று நான் உங்களையும் எனது அம்மாவையும் ஒரே நிகழ்ச்சியில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இன்றைக்கு 40 வயது ஆகிறது. ஆனால் நீங்களும் அப்பாவும் திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டுகளை கொண்டாடி விட்டீர்களா. கிட்டத்தட்ட எனது வாழ்க்கையில் பாதி வாழ்க்கையில் நீங்கள் தான் எனது பெற்றோராக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் நன்றி. நான் அழுகக் கூடாது என்று நினைத்தேன், ஆனால் அழுதுவிட்டேனே " என்று தெரிவித்தார். இவர் இவ்வாறு பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாராட்டிய சாயா: இந்த நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமாரின் அம்மாவான, சாயா பேசும் போதும் ராதிகாவும் சரத்குமாரும் வரலட்சுமிக்கு மிகவும் சப்போர்ட்டிவாகவும் பக்கபலமாகவும் இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

Varalaxmi Sarathkumar Mentions Radhika Sarathkumar is Her Third Parent at Saraswathi Movie Pre-Release Event

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X