பெர்சனல் வாழ்க்கையால்தான் எல்லாம் போச்சு.. வரலட்சுமி சரத்குமார் வெளிப்படை பேச்சு
சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமீபத்தில்தான் அவர்களுக்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவானவர் சரத்குமார். பல ஹிட் படங்களை கொடுத்த சரத்குமார் இப்போது குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடப்த்தக்கது.
பாலா படத்தில் நிரூபித்த வரலட்சுமி: சூழல் இப்படி இருக்க பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த படமான தாரை தப்பட்டை படத்தில் கமிட்டானார் வரலட்சுமி. பாலா படம் என்றாலே நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கும் என்ற விதியின்படி இந்தப் படத்திலும் வரலட்சுமிக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் இருந்தது. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார் வரலட்சுமி. அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அத்தனையிலும் அதகளம் செய்தார். இருப்பினும் தாரை தப்பட்டை போதிய ரசிகர்களை கவரவில்லை.
போதிய வாய்ப்பு இல்லை: தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நிச்சயதார்த்தம்: 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இந்தச் சூழலில் அவருக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
வரலட்சுமி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சினிமாவுக்கு நான் வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. சினிமாவுக்கு நான் வருவதற்கு முன்னர் இப்போ 22 வயது ஆகிறது. 28 வயதுக்குள் பெரிய நடிகையாக மாறிடணும். 32 வயதில் திருமணம், 34 வயதில் குழந்தைகள் என்று பிளான் போட்டு வைத்திருந்தேன். ஆனால் எனக்கு இப்போவே 38 வயது ஆகிவிட்டது. வாழ்க்கையும் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. நல்ல கேரக்டர்களையும் இப்போதுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். எப்போதுமே வாழ்க்கையை பிளான் பண்ணக்கூடாது.
ஃபோகஸ் செய்தேன்: போடா போடி படத்துக்கு பிறகு சினிமாவில் நான் கவனம் செலுத்தாமல் பெர்சனல் வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது சினிமா கரியரில் நான் செய்த பெரிய தவறு. அந்த வயதில் நாம் செய்வது தவறு என்றும் தெரியவில்லை. என்னுடைய கவனம் அப்போதே சரியாக மட்டும் இருந்திருந்தால் நிறைய படங்களில் நடித்திருந்திருப்பேன். சினிமா வாய்ப்புகள் எனக்கு வராதபோது, நான் அழகா இல்லையா, நன்றாக நடனம் ஆடவில்லையா, நன்றாக தமிழ் பேசவில்லையா என பல கேள்விகளை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். அதையே நினைத்து கவலைப்படுவேன். ஆனால் அந்த சறுக்கல்கள்தான் என்னை பலப்படுத்தின"என்றார்.


Click it and Unblock the Notifications











