அம்மாவான வரலட்சுமி சரத்குமார்.. நன்றாக பார்த்துக்கொள்கிறாராம்.. அவங்களே அதிரடியா சொல்லிட்டாங்க!

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் நல்லபடியாக வாழ்ந்துவரும் சூழலில்; தான் ஏற்கனவே தாயாகிவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வரலட்சுமி கூறியிருப்பது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியான சாயா தேவியை விவாகரத்து செய்துவிட்டார். அந்தத் தம்பதிக்கு பிறந்தவர் வரலட்சுமி. அவரும் தன்னுடைய தந்தை போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட; சுப்ரீம் ஸ்டார் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். ஆனால் சாயா தேவியும், ராதிகாவும் சேர்ந்து சரத்தின் மனதை மாற்றி சம்மதம் வாங்க; போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரு. அந்தப் படம் தோல்வியடைந்தது.

நல்ல நடிகை: முதல் படம் தோல்வியடைந்தாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார். இவற்றில் எந்தப் படமும் ஓடவில்ல. அதேசமயம் ஹீரோயின் ரோலாக இருந்தாலும் சரி; வில்லி ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய முழு உழைப்பை அதில் போடுவார் என்பதை அப்படங்கள் ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் உணர்த்தின.

Varalaxmi Sarathkumar Opens Up Why She Chose Not to Become a Mother Now
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி: இதற்கிடையே அவர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்துவருவதாக தொடர்ந்து கிசுகிசுக்களும், பேச்சுக்களும் கிளம்பின. ஆனால் அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரைத்தான் காதலிக்க செய்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று; ஒரு பெண் குழந்தைக்கு தந்தை. தனது மகளின் காதலுக்கு உடனடியகா சம்மதம் தெரிவித்த சரத்; இரண்டு பேருக்கும் கடந்த வருடம் தாய்லாந்தில் திருமணம் செய்துவைத்தார்.

சூப்பர் ஜோடி: திருமணத்துக்கு பிறகு கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக மாறியிருக்கிறார்கள் அவர்கள். ஒருவரையொருவர் அனுசரித்து சென்று; ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் துணையாகவும் இருக்கிறார்கள். முக்கியமாக திருமணத்துக்கு பிறகு தனது பெயருக்கு பின்னால் வரலட்சுமியின் பெயரை போட்டுக்கொள்வேன் என்றும் ஒரு ஸ்டேட்மெண்ட்டை நிக்கோலாய் விட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் வரலட்சுமியின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

வருவின் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தாய்மை என்பது பெரிய விஷயம்தான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றால்தான் தாய் என்பது இல்லை. எனக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. ஒருவேளை அந்த முடிவு எதிர்காலத்தில் மாறலாம். நான் என் தங்கைக்கு, நாய்க்கு தாயாக இருக்கிறேன். என்னை சுற்றியுள்ளவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அதுதான் என்னை பொறுத்தவரை தாய்மை. ஒரு பெண் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுப்பதே பேரண்ட்டிங்க்கில் சிறந்த முடிவுதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X