திரிஷா என் அக்கா மாதிரி.. சரத்குமார் மகள் வரலட்சுமி ஓபன் டாக்.. எத்தனை வருட பழக்கம் தெரியுமா?
சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி சில வருடங்களுக்கு முன்பு நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் நல்லபடியாக வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் வரலட்சுமி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திரிஷா குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது
சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியான சாயா தேவியை விவாகரத்து செய்துவிட்டார். அந்தத் தம்பதிக்கு பிறந்தவர் வரலட்சுமி. அவரும் தன்னுடைய தந்தை போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட; சுப்ரீம் ஸ்டார் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். ஆனால் சாயா தேவியும், ராதிகாவும் சேர்ந்து சரத்தின் மனதை மாற்றி சம்மதம் வாங்க; போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரு. அந்தப் படம் தோல்வியடைந்தது.

சூப்பர் நடிகை: முதல் படம் தோல்வியடைந்தாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார். இவற்றில் எந்தப் படமும் ஓடவில்ல. அதேசமயம் ஹீரோயின் ரோலாக இருந்தாலும் சரி; வில்லி ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய முழு உழைப்பை அதில் போடுவார் என்பதை அப்படங்கள் ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் உணர்த்தின.
திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி: இதற்கிடையே அவர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்துவருவதாக தொடர்ந்து கிசுகிசுக்களும், பேச்சுக்களும் கிளம்பின. ஆனால் அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரைத்தான் காதலிக்க செய்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று; ஒரு பெண் குழந்தைக்கு தந்தை. தனது மகளின் காதலுக்கு உடனடியகா சம்மதம் தெரிவித்த சரத்; இரண்டு பேருக்கும் சில வருடங்களுக்கு தாய்லாந்தில் திருமணம் செய்துவைத்தார்.
சூப்பர் ஜோடி: திருமணத்துக்கு பிறகு கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக மாறியிருக்கிறார்கள் அவர்கள். ஒருவரையொருவர் அனுசரித்து சென்று; ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் துணையாகவும் இருக்கிறார்கள். முக்கியமாக திருமணத்துக்கு பிறகு தனது பெயருக்கு பின்னால் வரலட்சுமியின் பெயரை போட்டுக்கொள்வேன் என்றும் ஒரு ஸ்டேட்மெண்ட்டை நிக்கோலாய் விட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் வரலட்சுமியின் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திரிஷா பற்றி: அந்தப் பேட்டியில் திரிஷா குறித்து பேசிய வரலட்சுமி, "திரிஷா எனக்கு மூத்த அக்கா மாதிரி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நாங்கள் பழக்கம். நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது திரிஷாவுக்கு 16 வயது. எனக்கு 14 வயது. இந்த சினிமா பிஸ்னெஸுக்கெல்லாம் முன்னதாகவே நாங்கள் பழக்கம். இப்போது நாங்கள் இரண்டு பேரும் தினமும் சந்தித்துக்கொள்வதில்லை; பேசுவதில்லை. ஏதோ ஒன்று நடந்தால் உடனடியாக நாங்கள் பேசிக்கொள்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
