இனி அழுதுட்டே இருப்பியா?.. 9 வயதில் அம்மாவுக்கு அட்வைஸ் செய்த வரலட்சுமி.. செம பொண்ணு

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர். அவருக்கு சில வருடங்கள் முன்புதான் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து வரு நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தாய் சாயா குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே வைரலாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வில்லன்,ஹீரோ, குணசித்திர நடிகர் என பல முகங்களை கொண்டவர் சரத்குமார். அவருக்கும், அவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர் வரலட்சுமி. பாய்ஸ், 7ஜி ரெயின்போ காலனி, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தாலும்; அப்பாவின் சம்மதத்துக்காக பொறுமையாக காத்திருந்தார். ஒருவழியாக சாயாவும், சரத்தின் இரண்டாவது மனைவி ராதிகாவும் சேர்ந்து சம்மதம் பெற்றுக்கொடுத்த பிறகு போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Varalaxmi Sarathkumar Reveals the Emotional Advice She Gave Her Mother as a Child
Photo Credit:

சூப்பர் நடிகை: அந்தப் படம் தோல்வியடைந்தாலும் வருவுக்கு தேவையான வெளிச்சம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். பாலா படத்தில் நடிப்பதற்கு எப்போதுமே தனி திறமை வேண்டும். அது இவருக்கும் இருந்ததால் அசால்ட்டாக நடித்துவிட்டார். இருப்பினும் தோல்விதான் கிடைத்தது. அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் சரியாக போகவில்லை.இருந்தாலும் வரலட்சுமி சூப்பர் நடிகை என்ற பெயரை தவறாமல் பெற்றுக்கொண்டே வந்தார். அதன் பலனாக தெலுங்கிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

Also Read
ரோகிணி தியேட்டரில் அப்படி கத்திய பிறகு.. கருப்பு 2 வருமா?.. மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி
ரோகிணி தியேட்டரில் அப்படி கத்திய பிறகு.. கருப்பு 2 வருமா?.. மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி

திருமணம்: இதற்கிடையே விஷாலுடன் காதல் என கிளம்பிய கிசுகிசு; கிசுகிசுவாகவே முடிந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை காதலித்தார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. மேலும் டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். நிக்கோலாய் - வரு காதல் ஸ்ட்ராங்கானதுதான் என்பதை உணர்ந்த சரத்குமார் திருமணத்துக்கு பச்சை கொடி காண்பிக்க; சில வருடங்களுக்கு முன்பு பிரமாண்டமாக தாய்லாந்தில் வைத்து திருமணமும் முடிந்தது.

இப்போதும் பிஸிதான்: திருமணத்துக்கு பிறகும் வரலட்சுமி நடிப்பதில் பிஸியாகவே இருக்கிறார். அடுத்ததாக மலையாளத்தில் தீரம், தெலுங்கில் எஸ். சரஸ்வதி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். வரு தொடர்ந்து நடிப்பதற்கு ஒரு கணவராக நிக்கோலாயும் முழு ஆதரவை கொடுக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வரலட்சுமி பேசிய சில விஷயங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும்.

அம்மாவுக்கு அட்வைஸ்: அப்போது அம்மா ஒரு நாள் அழுதுகொண்டே இருந்தார். நான் அவரிடம் சென்று, 'இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் அழுதுகொண்டே இருக்கப்போறியா' என கேட்டேன். அன்றிலிருந்து அம்மா ட்ரிக்கர் ஆகி நன்றாக வளர்ந்தார். இதுதான் வாழ்க்கையா? அடுத்தக்கட்டத்துக்கு போக வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். நான் அப்படி பேசிய பிறகு அம்மா பல விஷயங்களை அடைந்தார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X