twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதினு தெரியும்.. ‘மக்கள் செல்வி’ யாருனு தெரியுமா மக்களே?

    வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது டேனி படக்குழு.

    |

    Recommended Video

    பிரபாஸை பார்த்து 'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி- வீடியோ

    சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரலட்சுமி சரத்குமாருக்கு 'மக்கள் செல்வி' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சினிமாவில் நடிப்பதைத் தாண்டியும் சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியலைக் கற்றுக் கொண்டு அதில் இறங்கும் திட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் வரலட்சுமி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'டேனி' படத்தின் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு.

    அதெப்படி வரலட்சுமிக்கு 'அந்த'ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்! அதெப்படி வரலட்சுமிக்கு 'அந்த'ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்!

    போலீசாக வரலட்சுமி:

    போலீசாக வரலட்சுமி:

    வரலக்ஷ்மி போலீசாக நடிக்கும் இப்படத்தினை சந்தான மூர்த்தி இயக்குகிறார். இந்த போஸ்டர்களை நடிகர் ‘ஜெயம்' ரவி வெளியிட்டார். அதில் வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் செல்வி:

    மக்கள் செல்வி:

    போஸ்டரை வெளியிட்டதற்காக ஜெயம் ரவிக்கு நன்றி தெரிவித்த வரலட்சுமி, அதில் தனக்கு மக்கள் செல்வி பட்டம் கொடுக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்துள்ளார். திரைத்துறையினரும் வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு, மக்கள் செல்வி பட்டத்திற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வித்தியாசமான கதாபாத்திரங்கள்:

    வித்தியாசமான கதாபாத்திரங்கள்:

    நாயகியாக அறிமுகமானபோதும், சர்கார், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் வரலட்சுமி வில்லியாக நடித்திருந்தார். அப்படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து வில்லி மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர்.

    கை நிறைய படங்கள்:

    மாரி 2 படத்தைத் தொடர்ந்து, கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு மற்றும் டேனி என 10க்கும் மேற்பட்ட படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். மேலும், தெலுங்கிலும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

    English summary
    The first look posters of actress Varalaxmi Sarathkumar’s Danny was unveiled today, on her birthday. The film is directed by Santhanamoorthy, and is said to be have a woman-centric subject.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X