சின்மயி ஏன் பொய் சொல்லணும்?, எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்
சென்னை: சின்மயி சொல்லும் பாலியல் புகாரில் உண்மை இருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்தார். இதை அவர் விளம்பரம் தேட கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் சின்மயிக்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

உண்மை
சின்மயி நடந்த சம்பவத்தை விவரமாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை உள்ளது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு அளித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார் வரலட்சுமி. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.

உண்மை
சின்மயி சொல்வதெல்லாம் உண்மை. நான் அவருக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று முதலில் சொன்ன நடிகை சமந்தா தான். நடிகர் சித்தார்த் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சின்மயியை மதிப்பதாக ட்வீட் செய்துள்ளார் விஷால்.
சின்மயி
அனைத்து பெண்களும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். எங்களுக்காக போராடும் சின்மயியை நினைத்து பெருமையாக உள்ளது. அவரின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்று முன்னாள் பிக் பாஸ் 2 போட்டியாளர் ரம்யா தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை
தான் சிறுமியாக இருந்தபோது கிட்டத்தட்ட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் உன்னை அறிந்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ப்ரொமோ வீடியோவில் இதை தெரிவித்துள்ளார். இதை தெரிவிக்க தான் வெட்கப்படவில்லை என்கிறார் வரு.

வைஷ்ணவி
சின்மயிக்கு ரம்யா மட்டும் அல்ல பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவியும் ஆதரவு தெரிவித்துள்ளார். மீ டு தொடர்பாக சின்மயிக்கு பலரும் தகவல்களை அனுப்பி வருகிறார்கள். பாடகர் ரகு தீக்சித், கார்த்திக் உள்ளிட்ட சில பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தனக்கு வந்த தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டார் சின்மயி. அத்தனை ட்வீட்டுகளையும் ரீட்வீட் செய்துள்ளார் வைஷ்ணவி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











