நீச்சல் குளமும்.. கார மாங்காயும்.. சம்மர் ஸ்பெஷலை களமிறக்கிய மகேஷ் பாபு ஜோடி.. 9 கோடி பேர் ஹேப்பி!

ஹைதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா சம்மர் தொடங்கிய நிலையில், தனது இன்ஸ்டாகிராமை பின் தொடரும் 9 கோடி ரசிகர்களுக்கு நீச்சல் உடை தரிசனத்தை காட்டி திணறவிட்டுள்ளார்.

விஜய் நடித்த தமிழன் படத்தில் நடிக்கத் தொடங்கிய பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் அசத்தினார். ஆனால், ஆலியா பட் வருகைக்கு பிறகு அங்கே ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் அப்படியே ஹாலிவுட் பக்கம் ஒதுங்கினார்.

Varanasi Star Priyanka Chopra started celebrating her summer vacation and shares photos and clips
Photo Credit:

சர்வதேச நடிகையாக கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா ராஜமெளலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் வாரணாசி படத்தில் ஆக்‌ஷன் குயினாக நடித்து வருகிறார்.

ஹைதராபாத்தில் செட்டில்: மும்பையை காலி செய்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்று அங்கே புதிதாக ஹோட்டல் எல்லாம் திறந்து பிசினஸ் உமனாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் மாறிய பிரியங்கா சோப்ரா தற்போது மகேஷ் பாபு படத்தில் நடித்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்கி அங்கே வசித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளித்து விளையாடிய போட்டோக்களையும் சில வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டாக போட்டு லட்சக் கணக்கான லைக்குகளை அள்ளி வருகிறார்.

Varanasi Star Priyanka Chopra started celebrating her summer vacation and shares photos and clips
Photo Credit:

நீச்சல் குளமும்.. கார மாங்காயும்: சம்மர் வந்துவிட்டாலே போதும் நடிகைகள் புது புதுசாக பிகினி உடைகளை வாங்கி வைத்துக் கொண்டு நீச்சல் குளங்களுக்குச் சென்று போட்டோஷூட் நடத்துவதும், வீடியோக்களை வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரிக்கும் வேலைகளை ஆரம்பித்துவிடுவார்கள். ஏற்கனவே சுமார் 94 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள பிரியங்கா சோப்ரா நீச்சல் குளத்தில் மிளகாய் தூள் தடவிய கார மாங்காயை கடித்துச் சாப்பிட்டுக் கொண்டு நானும் ஆந்திராக்காரி தாண்டா என்கிற ரேஞ்சில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

வாரணாசிக்கு வெயிட்டிங்: பல வருடங்கள் கழித்து டோலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில், மகேஷ் பாபு ஜோடியாக மந்தாகினி கதாபாத்திரத்தில் அவர் எப்படி மிரட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் வாரணாசி படத்துக்காக காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு வாரணாசி படம் ராமநவமிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்பீர் கபூரின் ராமர் கெட்டப்பை பார்த்து ட்ரோல் செய்த நெட்டிசன்கள் மகேஷ் பாபுவை ராமராக பார்க்க காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X