96 பட புகழ் வர்ஷா பொல்லம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத காதல் திரைப்படமாக பலராலும் ரசிக்கப்பட்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான "96" படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வர்ஷா பொல்லம்மா நடித்து மிகப் பிரபலமானவர்.

முட்டை கண்ணுமுழி, பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் இவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

பிகில் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கும் வர்ஷா பொல்லம்மா ஜூலை 30 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பக்கத்து வீட்டு பெண்

பக்கத்து வீட்டு பெண்

பார்க்க மிகவும் லட்சணமாக முட்டைக்கண்ணு முழியுடன் பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் வர்ஷா பொல்லம்மா தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வளர்ந்து வரும் நடிகையாக பிரபலமாகி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடகு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்பொழுது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நன்கு அறியப்பட்டார்

நன்கு அறியப்பட்டார்

சதுரன், வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த வர்ஷா பொல்லம்மா விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.

சாதிக்க துடிக்கும் பெண்மணி

சாதிக்க துடிக்கும் பெண்மணி

அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் யானும் தீயவன், சீமைத்துரை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சென்ற ஆண்டு அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்த பிகில் திரைப்படத்தில் கல்யாணம் ஆன பின்பும் கால்பந்தாட்டத்தில் சாதிக்க துடிக்கும் பெண்மணியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரது மனங்களையும் கொள்ளை கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சூசி சூடாங்கானே

சூசி சூடாங்கானே

இவ்வாறு திரைத்துறையில் படிப்படியாக பல சறுக்கல்கள் தாண்டி வெற்றி படியில் ஏறி வரும் வர்ஷா பொல்லம்மா தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமான இவர் "சூசி சூடாங்கானே" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு கிடைக்கின்ற வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பதித்து வரும் வர்ஷா பொல்லம்மா ஜூலை 30ஆம் தேதியான இன்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X