நீ இங்க பாலிடிக்ஸ் சண்டை போட்டுட்டு இரு.. அங்க ஒருத்தன் பூஜா ஹெக்டேவுக்கு லிப் லாக் அடிச்சிட்டான்!
சென்னை: விஜய்யுடன் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து ஜன நாயகன் படத்திலும் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜன நாயகன் திரைப்படம் இந்த மாதம் வெளியாகி விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஜன நாயகன் விஜய் சிஎம் ஆவதே ஏகப்பட்ட இடியாப்ப சிக்கலில் உள்ளது.
இந்நிலையில், இந்த சம்மருக்கு வெளியாகவுள்ள பூஜா ஹெக்டேவின் பாலிவுட் படத்தில் அவருக்கு வருண் தவான் லிப் லாக் கொடுத்த காட்சிகள் அடங்கிய பாடல் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஹ்ரித்திக் ரோஷன் உடன் மொகஞ்சதாரோ படத்தில் நடித்து பல வருடங்களுக்கு முன்பே பூஜா ஹெக்டே பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து விட்டார். இந்நிலையில், அவரது லேட்டஸ்ட் பாலிவுட் படமான Hai Jawani Toh Ishq Hona Hai திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர்: உலகத்துலயே இப்படியொரு அப்பா இயக்குநராக கிடைத்தால் அந்த மகனை விட யாருமே ஹேப்பியாக இருக்க முடியாது. டேவிட் தவான் தனது மகன் வருண் தவானை வைத்து இயக்கியுள்ள இந்தி படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூரை ஹீரோயின்களாக போட்டு வேறலெவல் கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார். ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் இந்த படம் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்த பெத்தி படத்துக்கு பலத்த போட்டியாக பாலிவுட்டில் இருக்கும் என்கின்றனர்.
2 லிப் லாக் சீன்: Hai Jawani Toh Ishq Hona Hai படத்தின் Tera Ho Jaun வீடியோ பாடல் வெளியாகி உள்ள நிலையில், அந்த பாடலில் 2 முறை பூஜா ஹெக்டேவுக்கு வருண் தவான் ஆசைத்தீர லிப் லாக் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது பாலிவுட்டை தாண்டி கோலிவுட் வரை வைரலாகி வருகிறது. வருண் தவான் - பூஜா ஹெக்டே லிப் லாக் காட்சிகளை ஸ்லோமோவில் போட்டு வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக ராஷ்மிகா மந்தனா, சமந்தா எல்லாம் பாலிவுட் படங்களில் நடித்த நிலையில், லிப் லாக் காட்சிகளில் தாராளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. மிருணாள் தாக்கூரும் லிப் லாக் சீனில் நடித்துள்ளாரா? என ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.
வைரலாகும் மீம்: "நீ இங்க பாலிடிக்ஸ் சண்டை போட்டுட்டு இரு.. அங்க ஒருத்தன் பூஜா ஹெக்டேவுக்கு லிப் லாக் அடிச்சிட்டான்" என கோலிவுட் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு லிப் லாக் கொடுக்காமல் இந்தி படத்தில் மட்டும் கொடுத்த பூஜா ஹெக்டேவை கண்டிக்கிறோம் என விஜய் ரசிகர்களும் கிளம்பி விட்டனர்.


Click it and Unblock the Notifications