»   »  பிந்து மாதவியை திருமணம் செய்யும் த்ரிஷாவின் முன்னாள் காதலர்?

பிந்து மாதவியை திருமணம் செய்யும் த்ரிஷாவின் முன்னாள் காதலர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் அதிபரும், பட தயாரிப்பாளருமான வருண் மணியனும், நடிகை பிந்து மாதவியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷாவும் தொழில் அதிபரும், பட தயாரிப்பாளருமான வருண் மணியனும் காதலித்து வந்தனர். நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால் திருமணம் நிச்சயதார்த்ததோடே நின்றுவிட்டது.

இதையடுத்து த்ரிஷா படங்களில் பிசியாகிவிட்டார்.

நடிப்பு

நடிப்பு

திருமணத்திற்கு பிறகு தன்னை நடிக்க வேண்டாம் என்று கூறியதால் தான் திருமணத்தை நிறுத்தியதாக த்ரிஷா தெரிவித்திருந்தார். நடிப்பு தான் தனக்கு முக்கியம் என்கிறார் அவர்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

த்ரிஷாவை பிரிந்த பிறகு வருண் மணியன் நடிகை பிந்து மாதவியை காதலித்து வருகிறார். இருவரும் கட்டிப்பிடித்து ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை பிந்து மாதவி சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

புகைப்படம்

புகைப்படம்

வருண் மணியனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வேகத்தில் அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டார். அவரும், வருணும் விரைவில் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

படங்கள்

படங்கள்

கோலிவுட்டில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பிந்து மாதவிக்கு வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தான் அவர் வருண் மணியனுடன் சேர்ந்துள்ளார்.

English summary
Actress Bindu Madhavai has released pictures of hers with Trisha's former fiancee Varun Manian. Buzz is that Bindu and Varun are set to tie the knot soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil