என்ன நளினம்... புடவையில் அசத்தும் வசுந்தரா - போட்டோ சூட்
சென்னை: வசுந்தரா காஷ்யப் தனது போட்டோ ஷூட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தமிழகத்தின் பாரம்பரியமாக சேலை உடுத்தி புகைப்படம் எடுத்துள்ளார். பழங்காலத்து ஹீரோயின் நடிகையர் திலகம் சாவித்ரியை நமக்கு நினைவு கூறுகிறார். மிகவும் நளினமாகவும், கம்பீரமாகவும் தோற்றம் அளிக்கும் இந்த போட்டோ ஷூட் மிகவும் அற்புதம். தென்மேற்கு பருவக் காற்று, பேராண்மை மற்றும் போராளி படத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.
சினிமா வாய்ப்பு என்பது ஒரு வரம். அது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதை சிறந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு ஒரு தனித்துவமான திறமை அவசியம். அப்படி வெற்றி பெற்றவர்கள் மிகவும் சிலரே.

அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் அழகாக பயன்படுத்தி கொண்டு முன்னேறி வருபவர்களில் ஒருவர் தான், அழகும் திறமையும் ஒன்று சேர்ந்த துடிப்பான வசுந்தரா காஷ்யப்.
இவர் மிஸ்.சென்னை போட்டியில் பங்குபெற்று மிஸ் கிரியேடிவிடி பட்டத்தை வென்றவர். ஒருபுறம் மாடலிங் செய்து வர, இயக்குநர் சரண் மூலமாக, வட்டாரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாடர்ன் பெண்ணான இவர் பல கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் அவரது தமிழ் பெண்களுக்கே உண்டான தோற்றமும், எளிதில் பேசக்கூடிய கிராமத்து பாஷையும் தான். இதற்கு சரியான உதாரணம், தென்மேற்கு பருவக் காற்று, பேராண்மை மற்றும் போராளி படத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.
அதிலும் போராளி திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவருக்காகவே உருவாக்கப்பட்டது போல் இருக்கும். அதில் வசுந்தரா ஈட்டி எறியும் காட்சி, அது ஒன்றே போதும். உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில், அவர் விக்ராந்த்துடன் இணைந்து கிராமத்து பெண்ணாக பக்ரீத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒட்டகமும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவிலேயே ஒட்டகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது தான்.
மேலும் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில் புத்தன் காந்தி இயேசு மற்றும் மைக்கேலாகிய நான் ஆகிய திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வசுந்தரா காஷ்யப் தனது போட்டோ ஷூட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தமிழகத்தின் பாரம்பரியமாக சேலை உடுத்தி புகைப்படம் எடுத்துள்ளார். பழங்காலத்து ஹீரோயின் நடிகையர் திலகம் சாவித்ரியை நமக்கு நினைவு கூறுகிறார். மிகவும் நளினமாகவும், கம்பீரமாகவும் தோற்றம் அளிக்கும் இந்த போட்டோ ஷூட் மிகவும் அற்புதம்.
பல படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தாலும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஒரு தமிழ் பெண்ணுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய வசுந்தரா காஷ்யப்பிற்கு அவரது திறமையை முழுமையாக வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புகள் கிடைத்து மேலும் அவர் வெற்றி பெற பில்மி பீட் சார்பாக வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











