வேதாளம் தெலுங்கு ரீமேக்… ராக்கி கயிறு கட்டி சிரஞ்சீவியின் தங்கையாகும் கீர்த்தி சுரேஷ் !
சென்னை : அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தெலுங்கு ரீமேக் ஆக உள்ளது.
2015ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமேனனும் நடித்திருந்தனர்.
தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள இப்படத்தில், சிரஞ்சீவி அஜித் வேடத்திலும், லட்சுமேனனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதும் உறுதியாகிஉள்ளது.

வேதாளம்
தல அஜித் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் 'வேதாளம்'. கடந்த 20115ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் சுமார் ரூ.120 கோடி வசூலை வாரிக்குவித்தது.

ஆலுமா டோலுமா
இந்த திரைப்படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே பேராதவை பெற்றது.

வேதாளம் தெலுங்கு ரீமேக்
இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் அஜீத் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சிரஞ்சீவியின் தங்கையாக
இந்த நிலையில் வேதாளம் படத்தில் அஜீத் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர், சிரஞ்சீவிக்கு கீர்த்தி சுரேஷ் ராக்கி கயிறு கட்டுவது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதை உறுதியாகி உள்ளது.

போலா சங்கர் டைட்டில்
சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு போலா சங்கர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை சிரஞ்சீவியின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டார். இதேபோல மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு காட்ஃபாதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யா
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆச்சார்யா. இப்படத்தில், ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது சிரஞ்சீவியின் 152-வது திரைப்படமாகும்.

அண்ணாத்தா படத்தில்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செல்வராகவனின் மிரட்டலான போட்டோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி இன்று வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











