தற்போது ஹிந்தி படத்தில் முதல் முறையாக நடித்து வரும் வேதிகா
Recommended Video
சென்னை : நடிகை வேதிகாவை நாம் பல தமிழ் படங்களில் பார்த்திருப்போம் ,கடைசியாக முனி 4 படத்தில் நாம் வேதிகாவை பார்த்திருக்கிறோம் .பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட வேதிகா 2014ல் இருந்து தமிழில் நடிக்கவில்லை அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து முனி 4ல் ஒரு குட்டி கதாபாத்திரத்திலே நடித்து இருந்தார் .
வேதிகா தமிழில் ஆக்ஸன் கிங் அர்ஜீனுடன் 'மத்ராசி' படத்தில் அறிமுகமானார்.அதற்கு பிறகு அவர் முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது ,அதை தொடர்ந்து தமிழ் ,மளையாளம், ஹிந்தி ,தெலுங்கு மற்றும் கண்ணடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் .மற்ற மொழிகளை விட வேதிகா
தமிழில் தான் அதிக படங்களில் நடித்து இருக்கிறார் .

படம் ஒன்றில் நடித்து வருகிறார் .இவர் தமிழில் முனியின் வெற்றிக்கு பிறகு காளை ,சக்கரக்கட்டி,மலை மலை ,பரதேசி ,காவிய தலைவன் ,முனி 4 ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் .இதில் பரதேசி படத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார் ,இப்படி ஒரு கதாபாத்திரத்தில் வேதிகா இனிமேல் நடிப்பது மிக கடினம் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் பாலா. அதற்கு பிறகு காவியத்தலைவன் படத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்திருப்பார் வேதிகா .

தற்போது 'தி பாடி' எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் வேதிகா .இது இவருக்கு ஹிந்தியில் முதல் படமாகும் ,நடிகர் எர்மான் ஹசாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வேதிகா .இந்த படத்தை பிரபல மளையாள இயக்குனர் 'ஜீத்து ஜோசப்' இயக்கி வருகிறார்.அதே நேரத்தில் ஜீத்து ஜோசப் தமிழில் தம்பி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதிகா தற்போது தயாரிப்பாளர் ஜசரி கனேஷன் தங்கை மகனான வருனுக்கு ஜோடியாக 'வினோதன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'பிரபு தேவா' தயாரிக்கவுள்ளார் .



Click it and Unblock the Notifications











