37 வயசாகுது.. இன்னும் கல்யாணம் ஆகல.. அரை டவுசரில் என்னவொரு ஆட்டம் போடுறாரு இந்த பிரபல நடிகை!

சென்னை: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டே இருந்தாலும் இன்னமும் இளமை மாறாத அளவுக்கு அப்படியே ஸ்லிம் பியூட்டியாகவே வலம் வருகிறார் நடிகை வேதிகா. 42 வயது வரை த்ரிஷா திருமணமே செய்யாமல் நடித்துக் கொண்டிருப்பது போல 37 வயதாகியும் நடிகை வேதிகாவும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

அந்த ஐடியா எல்லாம் அவருக்கு இருக்கிறதா என்று கூட அவர் பெரிதாக வெளிக்காட்டவில்லை. அதே போல பெரிதாக எந்தவொரு நடிகருடனும் கிசுகிசுவில் கூட சிக்காத நடிகையாக வலம் வரும் வேதிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ இளைஞர்களை கவர்ந்துள்ளது.

Vedhika latest fliexible dance video stuns youngsters very much

2006ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வேதிகா கிட்டத்தட்ட 19 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையிலும் இன்னமும் முன்னணி நடிகையாக மாற முடியாமல் தவித்து வருகிறார்.

ஆரம்பத்தில் அப்படி: மதராஸி படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து முனி படத்தில் நடித்திருந்தார். பல வருடங்கள் கழித்து மீண்டும் முனி 4 மற்றும் காஞ்சனா 3 என உருவான படத்தில் நடித்து ஸ்கோர் செய்தார். சாந்தனுவுடன் சக்கரக்கட்டி, சிம்புவுடன் காளை, பாலா இயக்கத்தில் அதர்வா முரளி நடித்த பரதேசி என ஆரம்பத்தில் இவர் வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தி பல முன்னணி நடிகர்கள் படங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து நடித்து வருகிறார்: தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். காஞ்சனா 3 படத்துக்குப் பிறகும் கூட இவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக பிரபுதேவாவின் பேட்ட ராப் படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியான கஜானா படத்திலும் நடித்துள்ளார். வாய்ப்புகள் எங்கெல்லாம் கிடைக்கின்றதோ அதையெல்லாம் சரியாக பயன்படுத்தி 19 ஆண்டுகள் சினிமாவில் சர்வைவ் பண்ணதே பெரிய விஷயம். இத்தனை ஆண்டுகள் ஆனாலும், அப்படியே அதே தோற்றத்தையும் மெயின்டெயின் செய்து வருகிறார் வேதிகா.

அரை டவுசரில் ஆட்டம்: திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் வேதிகாவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் 37 வயதாகி விட்டது. ஆனாலும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பிகினி போட்டோக்களையும், டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு இன்னமும் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் யக்‌ஷினியாகவே வலம் வருகிறார். சினிமாவை தாண்டி சில வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் வேதிகா, அரை டவுசர் அணிந்துக் கொண்டு ஆட்டம் போட்டுள்ள வீடியோவை சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குவியும் கமெண்ட்ஸ்: உங்களுக்கு வயசே ஆகாதா? என்றும் இத்தனை வருடங்கள் ஆகியும் இப்படியெல்லாம் ஸ்டெப் போட்டு சர்வ சாதாரணமாக எப்படி ஆடுறீங்க வேதிகா வேறலெவல் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன. காளை பட கெட்டப்பில் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ள நிலையில், வேதிகா மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X