வேதிகாவின் பாலிவுட் படம் ரெடியாகிடுச்சு.. இயக்குநர் யார் தெரியுமா?

மும்பை: சிம்புவின் காளை, பாலாவின் பரதேசி, சமீபத்தில் வெளியான ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வேதிகா தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பாலிவுட்டில் 'The Body' எனும் படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் தான் வேதிகா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என கலக்கி வந்த வேதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'The Body' திரைப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாகிறது.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

மலையாளத்தில் மோகன் லாலை வைத்து த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது, கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாலிவுட்டில் ‘தி பாடி' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வரும் டிசம்பர் மாதம் தமிழில், தம்பி படமும் பாலிவுட்டில் ‘தி பாடி' படமும் வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டுதான்.

ஹாலிவுட் ரீமேக்

ஹாலிவுட் ரீமேக்

2012ம் ஆண்டு ஓரியல் பாலோ இயக்கத்தில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ‘El cuerpo' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தான் ‘தி பாடி' திரைப்படம் உருவாகியுள்ளது. மனைவியை கொன்று விட்டு, கணவன் தனது இளம் கேர்ள் ஃப்ரெண்டுடன் உல்லாசமாக இருக்கலாம் என நினைக்கும் போது, அவனுக்கு ஏற்படும் திகில் மற்றும் த்ரில் உணர்வுகளின் தொகுப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

யாரெல்லாம்

யாரெல்லாம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகியுள்ள ‘தி பாடி' திரைப்படத்தில், வேதிகாவுடன், இம்ரான் ஹாஸ்மி, ரிஷி கபூர் மற்றும் ஷோபிதா துலிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் மற்றும் த்ரில்லர் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் என்ட்ரி

இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் நடிகை வேதிகா ஆகிய இருவருக்குமே இந்த படம் பாலிவுட்டில் அறிமுக படமாக அமைந்துள்ளது. வசந்த பாலனின் காவிய தலைவன், பாலாவின் பரதேசி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வேதிகாவுக்கு இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: vedhika வேதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X