சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்ஃபி வீடியோ எடுத்த வேதிகா.. பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை வேதிகா சென்னைக்கு ஷூட்டிங் வந்த நிலையில், சிக்னலில் புத்தகம் விற்கும் பெண் ஒருவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

2006ம் ஆண்டு அர்ஜுன் இயக்கி நடித்த மதராஸி படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா.

2007ல் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் வேதிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.

சிம்புவுக்கு ஜோடி

சிம்புவுக்கு ஜோடி

சாந்தனு ஹீரோவாக அறிமுகமான சக்கரக்கட்டி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த வேதிகா சிம்புவின் காளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். செம ஸ்லிம்மாக அப்போது எப்படி இருந்தாரோ அதே போல இப்பவும் நடிகை வேதிகா தனது உடல் தோற்றத்தையும் அழகையும் மெயின்டெயின் செய்து வருகிறார்.

காஞ்சனா 3

காஞ்சனா 3

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி படத்தில் நடித்த வேதிகா காஞ்சனா 3 படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து அத்தைப் பெண்ணாக நடித்து இருந்தார். ஓவியா, நிக்கி டம்போலி உடன் இணைந்து வேதிகாவும் ராகவா லாரன்ஸை காதலிக்கும் பெண்ணாக காஞ்சனா 3 படத்தில் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் வேதிகா வினோதன் எனும் தமிழ் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பிரபுதேவா படத்தில்

பிரபுதேவா படத்தில்

2019ல் வெளியான காஞ்சனா 3 படத்துக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த வேதிகா தற்போது பிரபுதேவாவின் வினோதன் படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்துள்ள வேதிகா சாலையில் எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சாலை வியாபாரியுடன் செல்ஃபி

சாலை வியாபாரியுடன் செல்ஃபி

வேகாத வெயிலில் வயிற்றுப் பிழைப்புக்காக டிராபிக் போடப்படும் நேரங்களில் உயிரை துச்சமாக நினைத்து சாலைகளில் நிற்கும் வாகனங்களில் வருபவர்களிடம் ரைம்ஸ் புத்தகம் போன்ற சிறு பொருட்களை வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் வேதிகாவின் கரை தட்டிய நிலையில், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

செல்ஃபி வீடியோ

செல்ஃபி வீடியோ

செல்ஃபி புகைப்படம் மட்டுமின்றி வீடியோவையும் எடுத்து அந்த சாலை வியாபார பெண்மணியை கொஞ்சம் ஹேப்பி ஆக்கி விட்டு, நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். வேதிகாவின் இந்த அன்பை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி கமெண்ட் போட்டும் லைக் போட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X