மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ.. வேதிகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : வேதிகா சென்ற ஆண்டு வெளியான தி பாடி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் ஜங்கிள் படத்தில் நடித்து வருகிறார்.

மிகவும் திறமை வாய்ந்த நடிகையான இவர் தற்பொழுது கவர்ச்சியிலும் படு கவர்ச்சியாக பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்க குட்டி டவுசரில் மெழுகு சிலை போல உட்கார்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

உச்சத்தை தொட்டிருப்பார்

உச்சத்தை தொட்டிருப்பார்

நடிகை வேதிகாவை பல திரைப்படங்களில் க்யூட்டான நடிகையாக பார்த்த ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் பாலாவின் பரதேசியில் அங்கம்மா கதாபாத்திரத்தில் மொத்த அழகிற்கும் கருப்பு மேக்கப் போட்டு ஆளே டோட்டலாக மாறியதோடு நடிப்பிலும் இதுவரை வெளியான திரைப்படங்களில் இந்தப்படத்தில் உச்சத்தை தொட்டிருப்பார். இதுவரை வேதிகாவின் திரை வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படமாக பரதேசி உள்ளது.

காவியத்தலைவன்

காவியத்தலைவன்

யதார்த்தமான கதைகளைக் கொண்டு உணர்ச்சிபூர்வமான படங்களை இயக்கி வரும் வசந்தபாலன் நாடக கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி உருவாக்கியிருந்த காவியத்தலைவன் படத்திலும் வித்தியாசமான நடிப்பை இதுவரை இல்லாத அளவிற்கு காட்டியதோடு அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற வேதிகாவுக்கு அதன் பிறகு பல திரைப்படங்கள் பல மொழிகளிலிருந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

பச்சையாக காட்டும் கவர்ச்சி

பச்சையாக காட்டும் கவர்ச்சி

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக உலா வந்து கொண்டிருந்த வேதிகா கடந்த 2019ஆம் ஆண்டு தி பாடி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகத்தை கொடுத்தார். இனி எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என இயக்குனர்களிடம் சொல்லாத குறையாக சமூக வலைதளங்களில் இவர் பச்சையாக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் குளிர்விக்கிறது.

வச்ச கண்ணு வாங்காம

வச்ச கண்ணு வாங்காம

சாதாரணமாகவே பொம்மை போல அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் நடிகை வேதிகா தற்போது பளபளப்பான தொடையை காட்டிக்கொண்டு பூ போட்ட குட்டி டவுசருடன் மெழுகு சிலைபோல மின்னிக்கொண்டு வச்ச கண்ணு வாங்காம உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த கவர்ச்சி கலந்த கியூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ என பாடி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vedika வேதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X