கவர்ச்சி, சினிமா இரண்டுக்குமே முழுக்கு: அறிவித்தார் நடிகை வீணா மாலிக்
இஸ்லாமாபாத்: அதிரடி கவர்ச்சி நடிகையான வீணா மாலிக் சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் சினிமா நடிகை வீணாமாலிக். லாகூரில் சில உருதுப் படங்களில் நடித்த இவர் பின்னர் இந்தியாவுக்கு வந்து இந்தி படங்களிலும் கன்னட, தெலுங்கு, பஞ்சாபிப் படங்களிலும் நடித்துள்ளார்.

எப்எச்எம்
எப்எச்எம் என்ற பத்திரிகைக்கு அவர் கொடுத்த நிர்வாண போஸ் அவரை பரபரப்பான நடிகையாக்கியது.

100 செக்ஸியான நடிகைகளில் ஒருவர்
உலகின் செக்ஸியான நடிகைகள் 100 பேரில் ஒருவர் என பத்திரிகைகளில் பட்டியலிடப்பட்டவர் வீணா. இந்தப் பட்டியலில் ஏஞ்சலீனா ஜோலி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

திருமணம்
சமீபத்தில் வீணா மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவைத்தார்.

முழுக்கு
இப்போது ஒரேயடியாக முழுக்குப் போட்டுவிட்டார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "இனி தான் சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாக" அறிவித்தார்.

நோ கவர்ச்சி
மேலும், இனி ஒரு போதும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கப் போவதில்லை என்றும் சமூக சேவைகளிலும், மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களிலும் மட்டுமே ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











