twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பலாத்கார பெண்ணுக்கு நீதி கிடைக்க பகவத் கீதை படிக்கும் வீணா ... ஒரு 'போட்டோஷூட்' ஸ்டண்ட்!

    By Sudha
    |

    பெங்களூர்: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணை வைத்து ஆளாளுக்கு ஸ்டண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கவர்ச்சிக்குப் பெயர் போன வீணா மாலிக்கும் இப்போது பகவத் கீதையை கையில் வைத்தபடி சில பல போட்டோக்களை வெளியிட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்காக என்று மெசேஜ் விட்டுள்ளார்.

    அவ்வப்போது ஏதாவது போட்டோஷூட் நடத்தி படங்களை வெளியிடுவது வீணாவின் ஹாபியாக மாறி விட்டது. அவர் நடித்து ஒரு படம் கூட இதுவரை வரவில்லை. ஆனால் அவரது போட்டோஷூட் கேரியர் படு பிசியாகத்தான் இருக்கிறது.

    லேட்டஸ்டாக ஒரு போட்டோ தொகுப்பை வெளியிட்டுள்ளார் வீணா. அதில், அவர் பகவத் கீதை படிப்பது போல உள்ளது. என்னடா இது விசித்திரமாக இருக்கிறதே என்று விசாரித்தால் வித்தியாசமான பதில் வருகிறது...

    ஆண்டின் முதல் நாளில் ஓம்

    ஆண்டின் முதல் நாளில் ஓம்

    இந்த ஆண்டின் தொடக்கத்தை ஓம் என்ற மந்திரச் சொல்லை உச்சரித்தபடி தொடங்கினாராம் வீணா மாலிக். பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் தனக்கு அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை இருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் வீணா மாலிக்.

    பகவத் கீதை வாசிக்கிறார்

    பகவத் கீதை வாசிக்கிறார்

    இந்த நிலையில் தற்போது பகவத் கீதையையும் வாசிக்க ஆரம்பித்து விட்டார் வீணா. சமபத்தில் ஷூட்டிங்கின்போது செட்டில், கேரவன் வேனில் அமர்ந்தபடி அவர் பகவத் கீதையை வாசித்தாராம்.

    பலாத்கார பெண்ணுக்கு நீதி கோரி..

    பலாத்கார பெண்ணுக்கு நீதி கோரி..

    என்ன திடீரென கீதைக்குத் தாவி விட்டீர்கள் என்று கேட்டால் டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் என்னை உலுக்கி விட்டது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் பகவத் கீதையை மனமுருகி படிக்கிறேன் என்று கூறியுள்ளார் வீணா.

    மனசெல்லாம் லேசாகுகிறது

    மனசெல்லாம் லேசாகுகிறது

    பகவத் கீதையைப் படிக்கும்போது மனசெல்லாம் லேசாகிப் போகிறது. அமைதியாகிறது, நிதானமாகிறது. இந்த இறை அனுபவம் எனக்குப் பிடித்துள்ளது. எந்த ஒரு மதத்திற்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பாடோ, எல்லையோ கிடையாது. அனைவரும் அனைத்து மதங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நேசிக்கலாம். அந்த அடிப்படையில்தான் நான் கீதையை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

    தினசரி திருக்குரானும் வாசிக்கிறேன்

    தினசரி திருக்குரானும் வாசிக்கிறேன்

    நான் தினசரி திருக்குரான் வாசிக்கிறேன். நமாஸ் செய்கிறேன். இப்போது கீதையும் படிக்கிறேன். எந்த மதத்திலும் வித்தியாசம் இல்லை என்பதே இதன் மூலம் நான் கண்ட அனுபவம். எல்லா மதமும் நமக்கு நல்ல வழியையே காட்டுகின்றன என்றார் வீணா.

    English summary
    Religion plays a vital role in everybody’s life. It depends how people relate to it. As Bollywood actress Veena Malik has started her New Year with the name of “OM”. Recently, she was seen reading Bhagavad Gita on the set of one of her upcoming films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X