எடையைக் குறைத்து சிக்கென்று மாறினார் வீணா மாலிக்

By Sudha

மும்பை கவர்ச்சிப் புயல் வீணா மாலிக், ரொம்ப நாட்களாக எடுக்கப்பட்டு வரும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்துக்காக கஷ்டப்பட்டு தனது எடையைக் குறைத்துள்ளாராம்.

ஏற்கனவே தனது வளைவு நெளிவுகளால் பலரது கண்களையும் உருள வைத்துக் கொண்டுள்ள வீணா, தற்போது தனது மேனி அழகை மேலும் மெருகேற்றியுள்ளாராம். எல்லாம் ரசிகர்களுக்காகத்தானாம்..

இதுவரை இல்லாத அளவுக்கு தனது மேனி வனப்பையும்,பொலிவையும் பெற்று பளிச்சிடுவதாகவும் பெருமையுடன் சொல்கிறார் வீணா..

சதீஷ் ரெட்டி...கிளாமர் சிட்டி

சதீஷ் ரெட்டி...கிளாமர் சிட்டி

சதீஷ் ரெட்டி தயாரிப்பில், ஹாரூன் ரஷீத் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் இந்த சிட்டி நெவர் ஸ்லீப்ஸ். படம் முழுக்க கிளாமரை வாரியிறைத்து வருகிறார்களாம் ரெட்டியும், ரஷீத்தும்.

கரீனா பாணியில்

கரீனா பாணியில்

முன்பு கரீனா கபூர் கூட இப்படித்தான் படத்துக்காக தனது உடலை மெலிய வைத்து சைஸ் ஜீரோவுக்கு மாறினார்.அதே பாணியில் சிட்டி படத்துக்காக இப்படி மெனக்கெட்டு மேனியை சுருக்கிக்கொண்டுள்ளாராம் வீணா.

சாப்பாடு கட்.. காயும் வயிறு

சாப்பாடு கட்.. காயும் வயிறு

உடம்பை மெலிய வைப்பதற்காக டயட்டுக்கு மாறியுள்ளாராம் வீணா. அவரது வாய் முன்பெல்லாம் எதையாவது அரைத்தபடி இருக்கும்.இப்போது வாய்க்கு ரெஸ்ட் கொடுத்துள்ளாராம்.

சிலுக்குக்காக எடையைக் கூட்டினேன்

சிலுக்குக்காக எடையைக் கூட்டினேன்

எடைக்குறைப்புகுறித்து வீணா கூறுகையில், கன்னடப் படமான சில்க் சக்கத் மகா படத்துக்காக எடையைக் கூட்டினேன். இதனால் சிட்டி படத்துக்கான கன்டினியூட்டி பாதிக்கப்பட்டது. எனவே இப்போது எடையைக்குறைக்கிறேன். படத்தில்நான் மேலும் பொலிவாகத் தோன்றுவேன்.

ஏற்றி இறக்குவது கஷ்டம்தான்

ஏற்றி இறக்குவது கஷ்டம்தான்

உடல் எடையை ஏற்றுவதும்,பின்னர்குறைப்பதும் கஷ்டமானது என்பதை இப்போது அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். இருந்தாலும் எடை குறைவதால் மேலும் அழகாகிறோம், கவர்ச்சி கூடுகிறது என்பது சந்தோஷம் தருகிறது என்றார் வீணா.

வீணாவின் முயற்சிகள் வீணாகாமல் போனால் சரிதான்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X