பிஜி தீவில் வீணா மாலிக்... மொய்த்தெடுத்த ரசிகர்கள்!

By Sudha

பாகிஸ்தான் நாட்டு கவர்ச்சி வெடிகுண்டு வீணா மாலிக் பிஜி தீவுக்குப் போயிருந்தபோது அவரை ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்து மொய்த்தெடுத்து விட்டார்களாம். அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகாமல் மீண்டு வந்தாராம் வீணா.

நடிகர், நடிகைகளைப் பார்த்தால் பொது இடங்களில் ரசிகர்கள் மொய்ப்பதும், ஆட்டோகிராப்கேட்பதும் சகஜமாகி விட்டது. அதிலும் நடிகைகள், குறிப்பாக கவர்ச்சிகரமானவர்கள் வந்து விட்டால் அவ்வளவுதான் கன்னத்தைக் கிள்ளுவதும், இடுப்பைப் பிடிப்பதும், இன்ன பிற இடங்களில் கையை வைப்பதும் ரொம்பவே சகஜமாகி விட்டது. ஆனால் கவர்ச்சியான நடிகைகளுக்குத்தான் வெளியில் போவது என்றாலே கஷ்டமான ஒன்றாகி விடுகிறது. காரணம் ரசிக மகா ஜனங்கள் செய்யும்சேஷ்டைகள்தான்.

இந்த நிலையில், நவீன் பத்ரா என்பவரின் இயக்கத்தில் சூப்பர் மாடல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்குக்கு ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விட்டது. படக் குழுவினர் பிஜியில் முகாமிட்டு ஷூட் செய்து கொண்டிருக்கி்ன்றனர். வீணாவுக்கு பிஜியிலும கூட ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களாம். அந்த நாட்டு அட்டர்னி ஜெனரல் அயாஸ் சையத் கயூம், வீணா வந்ததைக் கேள்விப்பட்டு அட்டென்ஷனாகி அவரை சந்தித்துப் பேசி மகிழ்ச்சி அடைந்தாராம்.

இந்த நிலையில் வீணா மாலிக் பிஜி வந்துள்ள தகவல் தீவு முழுவதும் காட்டுத் தீயாக பரவி விட்டதாம். இதையடுத்து மக்கள் படையெடுத்து வந்துள்ளனர் வீணாவை வேடிக்கை பார்க்க. அப்போது பலர் வீணாவிடம் கை குலுக்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் சிக்கிக் கொண்ட வீணாவின் நிலை ரொம்ப கஷ்டமாகி விட்டதாம்.

இருப்பினும் ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்தும், புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தும் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்திய வீணா, கஷ்டப்பட்டு அங்கிருந்து நகர்ந்தாராம். தற்போது ரசிகர்களிடமிருந்து வீணாவைப் பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமாமா, தூர இருந்தே பார்த்துட்டுப் போயிடுங்கப்பா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X