பாலிவுட்டிலிருந்து பஞ்சாபிக்குத் தாவிய வீணா மாலிக்
மும்பை: பாலிவுட்டை தனது கவர்ச்சியால் கலக்கி வரும் வீணா மாலிக், அடுத்து பஞ்சாபி மொழியிலும் தனது திறமையை பாய்ச்ச கிளம்பியுள்ளார்.
பஞ்சாபி மொழியில் உருவாகும் ஜாட்ஸ் இன் கோல்மால் என்ற படத்தில் நடிக்கிறார் வீணா மாலிக். இப்படத்தின் நாயகன் ஆர்யா பாபர்.
பஞ்சாபி மொழிப் படத்தில் நடிப்பதற்காக சண்டிகருக்குப் போன வீணா, பஞ்சாபின் அழகாலும் மக்களின் அன்பாலும் கவரப்பட்டு இப்போது எங்கு போனாலும் பஞ்சாப் புகழைப் பாடி வருகிறார்.

சிறுசுதான்.. ஆனா அழகா இருக்கும்
பஞ்சாப் குறித்து வீணா மாலிக் கூறுகையில், ஜாட்ஸ் இன் கோல்மால் படத்தில் நான் ஸ்பெஷல் அப்பீயரன்ஸ் கொடுத்துள்ளேன். சின்ன ரோலாக இருந்தாலும் நல்ல ரோல், அழகாக இருக்கும்.

லவ்லி பஞ்சாப்
பஞ்சாப் மிகவும் லவ்லியாக இருக்கிறது. மக்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். எனக்கு கிட்டத்தட்ட இது சொந்த ஊர் போலவே தோன்றுகிறது. அழகான மொழி பஞ்சாபி. இதை பேச நான் ஆசைப்படுகிறேன்.

எல்லா இந்தியர்களையும் ஈர்ப்பேன்
எனது இந்தப் படத்தின் மூலம் பஞ்சாபியர்களின் மனில் இடம் பெறுவேன். அதேபோல த சிட்ட தட் நெவர் ஸ்லீ்ப்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் ஈர்ப்பேன் என்றார் வீணா.

சேலையில் வீணா
இந்தப் படத்திற்காக சேலை காஸ்ட்யூமில் படு வித்தியாசமாக காட்சி தருகிறார் வீணா. இந்த சேலை காஸ்ட்யூம் தன்னை புதிய கோணத்தில் எடுப்பாக காட்டுவதாகவும் அவர் பெருமை பொங்கச் சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











