லாலுவும் ஓகே., நிதீஷும் ஓ.கே.. இது வீணாவின் ஸ்டேட்டமென்ட்!
பாலிவுட்டைக் கலக்கி வரும் பாகிஸ்தான் கவர்ச்சிப் பிரளயம் வீணா மாலிக் பீகார் தேர்தலில் போட்டியிடப் போகிறாரோ என்னவோ லாலு பிரசாத் யாதவையும், நிதீஷ் குமாரையும் மாறி மாறிப் புகழ்ந்து தள்ளுகிறார்.

பாட்னாவை மையம் கொண்ட வீணா புயல்
வீணா மாலிக் பாட்னாவுக்கு ஒரு விசிட் அடித்துள்ளார். அங்கு ஒரு ஹோட்டலைத் திறந்து வைத்த அவர் பீகாரின் ஸ்பெஷல் உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தார்.

ஸைகாவை ருசி பார்த்த வீணா
பீகாரின் ஸ்பெஷல் உணவு வகைகளில் ஒன்றான ஸைகாவை அவர் ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்.

என் மனதில் பாட்னா
பாட்னா குறித்து அவர் கூறுகையில், பாட்னாவுக்கு வருவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். இப்போது வந்து விட்டேன். இனி அடிக்கடி வருவேன். இது என் மனதில் நீண்ட காலமாகவே தங்கிப் போய் விட்ட நகரமாகும்.

நிதீஷ் குமார் சூப்பர் முதல்வர்
நிதீஷ் குமார் இந்த மாநிலத்திற்காக செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். அருமையான முதல்வர் அவர். அவரைப் பாராட்டுகிறேன்.

லாலுவுக்கு எங்க ஊரில் நல்ல செல்வாக்கு
லாலு பிரசாத் யாதவும் சிறந்த தலைவர்தான். அவருக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர், செல்வாக்கான தலைவர் அவர்.

போஜ்புரி படங்களில் நடிக்கணும்
போஜ்புரி படங்களில் நடிக்க நான் ஆசையாக உள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.

அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு
அடுத்த மாதம் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளேன். எனக்காக அங்கு மக்கள் ஆவலோடும், ஆர்வத்தோடும் காத்திருக்கிறார்கள் என்று கவர்ச்சி பொங்கச் சிரித்தபடி சொன்னார் வீணா.


Click it and Unblock the Notifications











