விலைமாதுவாக நடிக்கும் வீணா மாலிக்… சிவப்பு விளக்குப் பகுதிக்கு விசிட்
ஜிந்தகி 50-50 பாலிவுட் படத்தில் நடிகை வீணா மாலிக் விபசார அழகியாக நடிக்கிறார். நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் விபச்சாரத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக அறிந்து கொள்ள விரும்பி அவர்களின் இருப்பிடத்திற்கே விசிட் செய்தார்.
ஆசியாவில் 2-வது மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியான காமதிபுரா என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு நேற்று வந்த வீணா மாலிக் ஒருநாள் முழுவதும் அங்கு பொழுதை கழித்தார்.
காமதிபுராவில் இதுவரை எண்ணற்ற பாலிவுட் படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களின் வாழ்க்கை வலி நிறைந்தது. இருந்தாலும் கவர்ச்சியான உடையில் கலக்கலாக வந்திருந்த வீணா மாலிக்கை அங்கிருந்த பெண்கள் ஆச்சரியம் கலந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

காமதிபுராவில் கலக்கல்
கவர்ச்சிப் புயல் வீணா மாலிக் கலக்கல் கவர்ச்சி உடையணிந்து காமதிபுராவிற்குள் நுழைந்தார். அவருடன் அவருடன் நடிகர் ராஜன் வர்மாவும் வந்திருந்தார்.

விபச்சார தொழிலாளிகள் மகிழ்ச்சி
பிரபல நடிகை ஒருவர் தங்களின் இருப்பிடத்தை தேடி வந்த உடன் மகிழ்ச்சியடைந்த செக்ஸ் தொழிலாளிகள் வீணா மாலிக்கை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு
காமதிபுராவிற்கு சும்மா வேடிக்கைப் பார்க்கப் போகவில்லை வீணா. எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அழகிகளுக்கு ஆணுறையை வழங்கினார்.

சிறந்த அனுபவம்
காமதிபுரா விற்கு வந்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வீணா, இங்குள்ள பெண்களுடன் பொழுதை போக்கியது சிறந்த அனுபவமாக கருதுகிறேன். நான் விபசார அழகியாக நடிக்கும் நிலையில், இங்கு வந்ததால் அந்த உண்மை வாழ்க்கையை உணர முடிந்தது என்றார்.

தீண்டத்தாகவர்கள் அல்ல
செக்ஸ் தொழிலாளர்களை தீண்ட தகாதவர்களாக ஒதுக்கி வைக்க கூடாது. செக்ஸ் தொழிலாளர்களை பாதுகாக்க நான் உதவுவேன். அவர்களுக்கு எனது மனதில் சிறப்பு இடம் உண்டு'' என்றும் வீணா கூறினார்.

மனதிற்கு மகிழ்ச்சி
காமதிபுராவுக்கு வந்து நாங்கள் விழிப்புணர்வு செய்தது மிகுந்த மனமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது'' என்றார் ஜிந்தகி 50-50 படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கும் ராஜன் வர்மா .இந்த திரைப்படம் இம்மாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications