கின்னஸ் சாதனைகளை உடைக்கக் கிளம்பும் வீணா மாலிக்!
மும்பை: நடமாடும் கவர்ச்சி ஏரியாக வலம் வரும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், அடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். இப்படம் 20 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் எடுக்கப்படவுள்ளதாம்.

'டிராமா ராணி' வீணா...!
வீணாவின் டிராமா க்வீன் ஆல்பம் ஏற்கனவே இசைத்தட்டு விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இசை அலையுடன் கவர்ச்சி அலையுடன் சேர்த்துக் கலக்கி இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் வீணா என்பது நினைவிருக்கலாம்.

ஒருபோதும் தூங்காமல் !
தற்போது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார் வீணா. இதில் ஹாலிவுட் நடிகர் ஜெரிமி மார் வில்லியம்ஸ் உடன் நடிக்கிறார்.

20 சாதனைகளை உடைக்கப் போகிறார்களாம்!
இந்தப் படம் 20 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் படமாக்கப்படவுள்ளதாம். ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தை சதீஷ் ரெட்டி தயாரிக்கிறார்.

எப்படி உடைக்கப் போறாங்களோ.. டென்ஷனில் வீணா!
இந்த சாதனைப் படம் குறித்து வீணா கூறுகையில், எனக்கு இப்பவே படு டென்ஷனாக இருக்கிறது. 20 சாதனைகளை உடைப்பது என்றால் சும்மாவா.. செம திரில்லாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெரும் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார்.

வீணாவுடன் சேருவதே பெரும் சந்தோஷம்தானே.. .ரெட்டி 'ஹிஹிஹி'!!
வீணாவை தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி கூறுகையில், எனது படம் சாதனைகளை முறியடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் வீணாவைப் போன்ற அழகான ஒரு நடிகை எனது படத்தில் இருப்பதுதான் பெரிய பெருமையாக உள்ளது. அவருடன் சேருவது பெரும் சந்தோஷம் என்று குதிக்காத குறையாக குஷாலாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications